நீங்கள் சொன்னா ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி.. விநியோகஸ்தருக்கு நன்றி கூறிய ரஜினி!
சென்னை: பேட்ட படம் குறித்து விநியோகஸ்தர் அனுப்பிய வாட்ஸ் அப் வாழ்த்துச் செய்திக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறி பதிலளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இந்த படம் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் கதை கரு இல்லாவிட்டாலும் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ் ஆப் ஆடியோ
90 -களில் பார்த்த ரஜினியை தற்போது பேட்ட படம் மூலம் ரசிகர்கள் பார்ப்பதால் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் ரஜினிகாந்துக்கு வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம்வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
|
வாழ்த்துகள் சார்
அதில் "சார் நான் திருப்பூர் சுப்பிரமணியன் பேசுறேன். பேட்ட ரொம்ப அருமையான படம். ஆடியன்ஸ் ரொம்ப நல்லா ரசிக்கிறாங்க. நல்ல ஒரு பெரிய ஹிட்டான படம். பொங்கலுக்கு ரொம்ப நல்ல படத்தை கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துகள் சார்" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியே
அதற்கு ரஜினிகாந்தும் ஆடியோ பதிவில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் ரொம்ப நன்றி திருப்பூர் சுப்பிரமணியம் சார்.. (சிரிக்கிறார்) ரொம்ப நாளாச்சு. நீங்கள் சொன்னா ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி.

நன்றி
ரொம்ப சந்தோஷம் உங்கள் வாயால் கேட்பதற்கு. ரொம்ப நன்றிங்க. தேங்கஸ் ஏ லாட்" என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவுகளை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications