தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் சென்னையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேட்டி அளித்தார். பாஜகவின் காவி அரசியல், திருவள்ளுவர் பிரச்சனை என்று பல விஷயங்கள் குறித்து பேசினார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுகிறது.
தமிழகத்தில் நல்ல ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்றும் கூறினார். அவரின் இந்த பேட்டி பெரிய வைரலாகி வருகிறது.

என்ன கருத்து
இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் எல்லோரும் இதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் ரஜினியின் கருத்தை எதிர்த்துள்ளார்.

அழகிரி என்ன சொன்னார்
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவர்கள் யாரும் இல்லை.

உண்மைதான்
ரஜினி சொன்னது உண்மைதான். அவரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ரஜினி கட்சி தொடங்க வேண்டும். அவர் வந்த பின் வெற்றிடம் போகும்.

ரஜினி இருப்பார்
தமிழகத்தில் ஆளுமையான தலைவராக ரஜினி உருவெடுப்பார். ரஜினி வருவார். ரஜினி கட்சியில் சேர்வது குறித்து எல்லாம் கருத்து கூற முடியாது, என்று அழகிரி பதில் அளித்துள்ளார். ஆனால் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு அழகிரி பதில் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications