சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது வேற லெவல் போஸ்டர்.. மதுரையை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து வரும் டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அவரது மதுரை ரசிகர்களோ சற்று வித்தியாசமாக, தமிழக முதல்வராக பதவியேற்க போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த் என்று ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் அண்ணாத்தே பட சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஹைதரபாத் சென்றார்.

அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

மருத்தவர்கள் என்ன சொன்னார்கள்

மருத்தவர்கள் என்ன சொன்னார்கள்

ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. எனினும் ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாக ஹைதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு தங்கி இரண்டு நாள் சிகிச்சை பெற்று வந்த ரஜினி நேற்று மாலை சென்னை திரும்பினார். அவரை மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வெடுக்க வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ரஜினி திட்டவட்டம்

ரஜினி திட்டவட்டம்

இதனால் நடிகர் ரஜினிகாந்தை அவரது சொந்தங்கள், கட்சியை அறிவிப்பை தள்ளிவைக்கும்படியும், முழுமையாக ஓய்வெடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்து வருவதாக ஊடகவட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ரஜினியோ, அரசியல் கட்சி அறிவிப்பை திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 31ம் தேதி அறிவிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக ரஜினி எதுவும் அறிவிக்கவில்லை.

அரசியல் அறிவிப்பு

அரசியல் அறிவிப்பு

பொதுவாக ட்விட்டரிலோ அல்லது ஊடகவியலாளர்களை சந்தித்தோ ரஜினி அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். எனவே அப்படித்தான் இந்த முறையும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்தின் மதுரை ரசிகர்கள் எல்லா எதிர்பார்ப்பையும் தாண்டி வித்தியாசமான போஸ்டர்களை ஓட்டியுள்ளனர்,

ரஜினி போஸ்டர்

ரஜினி போஸ்டர்

அவர்கள் ஓட்டியுள்ள போஸ்டரில், மாற்றத்திற்கான பேரலை வெல்லும், அதை விரைவில் நேரலை சொல்லும். தமிழக முதல்வராக பதவியேற்க போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த். வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்" என்று பிரபல ஊடகத்தின் செய்தியாளர், அந்த தொலைக்காட்சியின் நேரலையில் சொல்வதை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் ரஜினியின் முரட்டு பக்தர்கள் மதுரை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
Madurai fans Poster pasted in street. Rajinikanth will take over as Chief Minister of tamilnadu. the tv channels will telecast live report in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X