அருகில் வந்த ரசிகர்.. இது என்ன தாமரையா?.. அப்படியே கையில் வாங்கிய ரஜினிகாந்த்! அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களை வாழ்த்தினார்.
Recommended Video
சித்திரை 1ம் தேதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பலரால் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ரஜினிகாந்த்
இந்த நிலையில் சித்தரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீடு முன் ரசிகர்கள் இன்று குழுமினர். பொதுவாக விழா நாட்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரின் வீடு முன் கூடுவது வழக்கம். அவரின் ரசிகர்கள் வாழ்த்து பெறுவதற்காக இப்படி காத்திருப்பார்கள். ரஜினியும் விழாக்களின் போது வீட்டில் இருந்தால் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைப்பார். இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

தமிழ் புத்தாண்டு
இந்த நிலையில் இன்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை போயஸ் இல்லம் முன்பு ரசிகர்கள் காலையில் இருந்து திரண்டு இருந்தனர். அவரிடம் ஆசி பெற வேண்டும், அவரிடம் வாழ்த்து பெற வேண்டும் என்று ரசிகர்கள் அவரின் வீட்டிற்கு வெளியே காத்து இருந்தனர். இதையடுத்து வெளியே வந்த ரஜினிகாந்தை அவர்களை பார்த்து கையசைத்தார். அங்கு திரண்டிருந்த ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

தாமரை
இதையடுத்து அவரின் அருகில் சென்ற ரசிகர் ஒருவர்.. அவரிடம் தாமரை பூவை வழங்கினார். புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவருக்கு தாமரை பூவை ரஜினிகாந்த் ரசிகர் வழங்கினார். தாமரை பூவை சில நொடி உற்று பார்த்த ரஜினிகாந்த்.. அதை அப்படியே கையில் வாங்கினார். பின்னர் ரசிகரை பார்த்து நன்றி என்பது போல தாமரை பூவை தூக்கி காட்டி சைகை செய்தார்.

பாஜக
கடந்த வருட சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தது. அப்போது இவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டியதாக விவாதங்கள் நடந்தன. பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடைசியில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் கையில் தாமரை மலரை பெற்றது வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications