ஆமா... அண்ணாநகரில் "அதை" பார்த்தீங்களா.. இப்ப ஏன் இப்படி...என்னவா இருக்கும்.. ஒரே பரபரப்பு!
சென்னையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: அண்ணாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பார்த்து சென்னைவாசிகள் மண்டையை பிய்த்து கொண்டுள்ளனர்.. அதுதான் ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது.
காரணம்.. அது ரஜினி சம்பந்தப்பட்ட போஸ்டர்.. ரஜினி ரசிகர்கள் ஒட்டி வைத்துள்ளனர். அந்த போஸ்டரில் பாபா பட ரஜினி போட்டோ ஒரு பக்கமும், லீலா பேலஸில் பேசினாரே ரஜினி, அந்த போட்டோ இன்னொரு பக்கமும் உள்ளது.

"இறைவா! நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று.. பகைவர்களை நான் பார்த்து கொள்கிறேன்" என்று அச்சிடப்பட்டுள்ளது... இப்படிக்கு ரஜினிகனி என்று ஒரு பெயரும் போட்டோவும் உள்ளது. இந்த போஸ்டர் எதற்காக, யாருக்காக, ஏன், எப்படி, ஒட்டப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை..
அரசியலுக்கு வராமலேயே ரிடையர் ஆகிவிட்ட நிலையில், ரஜினியை எதற்காக ரசிகர்கள் வம்படியாக இழுத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அர்ஜுனமூர்த்தி கட்சி ஆரம்பித்துள்ள இந்த சூழலில், ரஜினி நண்பர் கமல் தனித்து களம் காண போகும் இந்த சூழலில், இப்படி ஒரு போஸ்டரை ஒட்டி வைத்தால் பொதுமக்கள் என்னவென்று நினைப்பது?
அதைவிட ஹைலைட், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு கீழே ஒருவர் உட்கார்ந்துள்ளார்.. அவர் ஒரு வியாபாரி போல.. தரையில் பொருட்களை விரித்து வைத்து கொண்டு வியாபாரம் செய்கிறார்.. ஆனால், ரொம்ப சோகமாக இருக்கிறார்.. அவருக்கும் இந்த போஸ்டருக்கும் ஏதாவது சம்பந்தமா என்றால் அதுவும் தெரியவில்லை.
போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர்கள் யார்? பகைவர்கள் யார் அதுவும் தெரியவில்லை.. ஆக மொத்தம் ஒன்று தெளிவாகிறது.. ரஜினி பேசினால் மட்டுமல்ல.. ரஜினியின் போஸ்டரும் அவரது அரசியல் போலவே நம்மை குழப்புகிறது..!












Click it and Unblock the Notifications