சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: டெய்சியை போலீஸில் புகாரளிக்க விடாமல் அண்ணாமலை தடுக்கிறார்! கொதிக்கும் ராஜீவ்காந்தி!

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி சூர்யா மீது போலீஸில் புகாரளிக்க விடாமல் பாஜக பெண் நிர்வாகி டெய்சி சரணை அண்ணாமலை தடுத்து வருகிறார் என திமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருச்சி சூர்யா மீது பாஜக பெண் நிர்வாகி டெய்சி சரண் புகார் அளிக்க முன் வந்தால், நிச்சயம் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்துள்ளார்.

திருச்சி சூர்யா -டெய்சி சரண் இடையேயான ஆடியோ உரையாடல் குறித்து தொடர்ந்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வரும் திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்ட தகவல் வருமாறு;

அதிமுக அரசு வஞ்சித்தது.. அதையே நீங்களும் தொடர்வதா? 'பச்சைத் துரோகம்’ - பாய்ந்து வந்த சீமான்! அதிமுக அரசு வஞ்சித்தது.. அதையே நீங்களும் தொடர்வதா? 'பச்சைத் துரோகம்’ - பாய்ந்து வந்த சீமான்!

அண்ணாமலை தடுக்கிறார்

அண்ணாமலை தடுக்கிறார்

''திருச்சி சூர்யா மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டாம் என டெய்சி சரணை அண்ணாமலை தடுத்து வருகிறார் என்பது தான் எனக்கு கிடைத்த தகவல். ஒரு வேளை சகோதரி டெய்சி திருச்சி சூர்யா மீது துணிச்சலாக புகார் கொடுக்க முன் வந்தால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறையினர் எடுப்பார்கள். பாஜகவில் உள்ள சீனியர்களை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக திருச்சி சூர்யா போன்ற ஆட்களை கட்சிக்கு அழைத்து வந்து உட்கட்சி அரசியல் செய்து வருகிறார் அண்ணாமலை.''

அனைத்தும் பொய்

அனைத்தும் பொய்

''15 நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வை, சாதாரணமாக அழைத்துப் பேசி அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டு இன்று காலை தான் எனக்குத் தெரியும் என அண்ணாமலை கூறியிருப்பதில் இருந்தே அவர் எவ்வளவு பெரிய பொய்யை கூறியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். இன்னொரு விஷயம் குஷ்பு இந்த விஷயத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காததை கவனிக்க வேண்டும். திமுக பேச்சாளர் சாதிக் என்பவர் தாம் பேசியது தவறு என வருந்தி மன்னிப்பு கேட்ட பிறகும் குஷ்பு அதை வைத்து அரசியல் செய்து வந்தார்.

ஏன் கண்டிக்கவில்லை

ஏன் கண்டிக்கவில்லை

''எங்க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகும் குஷ்பு அதை விட்டதாக இல்லை. முதலமைச்சர் மன்னிப்பு கேட்கணும் என பேசி வந்தார். ஏன் இப்போது திருச்சி சூர்யாவை பற்றி குஷ்பு பேச வேண்டியது தானே, திமுக பேச்சாளர் சாதிக் மீது வழக்குப் பதியப்பட்டதோடு கட்சித் தலைமையும் கடுமையான முறையில் அழைத்து கண்டித்தது. திருச்சி சூர்யாவை அழைத்து அப்படி கடுமையான கண்டிப்பு எதையும் அண்ணாமலை செய்தாரா. ''

குஷ்பு ஏன் பேசவில்லை

குஷ்பு ஏன் பேசவில்லை

''குஷ்பு இப்படி இருப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. பெண்ணியம் பேசும் குஷ்பு பதவிக்காக அண்ணாமலையை பாராட்டி பதிவு வெளியிடுகிறார். திருச்சி சூர்யா மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு குஷ்பு பாராட்டுகிறார் சரி, ஏற்கனவே கே.டி.ராகவன் விவகாரத்தில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னவானது. திருச்சி சூர்யா -டெய்சி சரண் ஆடியோ உரையாடல் விவகாரத்தை மறைத்து திசை திருப்ப காய்த்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.''

ஆதாரம் உள்ளதா

ஆதாரம் உள்ளதா

''பாஜகவினரை பொறுத்தவரை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதும், அவதூறுகளை பரப்புவதுமே அவர்களது வழக்கம். தன்னைச் சுற்றி தன்னை புகழ் பாடும் கூட்டத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்யலாம் என பார்க்கிறார் அண்ணாமலை. இது தமிழகத்தில் எள்ளளவும் எடுபடாது.'' இவ்வாறு திமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.

English summary
Rajiv Gandhi has assured that the police will take legal action if BJP woman Executive Daisy Saran comes forward to file a complaint against Trichy Surya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X