5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. தெலுங்கானாவில் இருந்து MP ஆகும் அபிஷேக் சிங்வி!
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு உள்பட 5 மாநில ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ். தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி தேர்வாகிறார்.
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களவை உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக பதவி வகித்து வரும் கிறிஸ்டோபர் திலக், இன்று மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில் 28 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு உறுப்பினருக்கான வேட்பாளராக தற்போது கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டு உள்ளார். திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல, மற்ற 4 மாநிலங்களில் காலியாகும் ராஜ்யசபா இடங்களில் 5 எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி தேர்வாகிறார்.
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர்கள்
சத்தீஸ்கர் - புலோ தேவி நேதம்
ஹரியானா - கரம்வீர் சிங் பௌத்
ஹிமாச்சல பிரதேசம் - அனுராக் ஷர்மா
தெலுங்கானா - அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்தர் ரெட்டி
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications