Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமர் சிலை செய்ய கருங்கல் தந்தவருக்கு ரூ.80,000 அபராதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமர் சிலை செய்யக் கல் தானம் செய்தவருக்கு ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவிலுள்ள ஒரு தலித் விவசாயியின் நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட கருங்கல்லிலிருந்துதான் அயோத்தியில் உள்ள, ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள புதிய பால ராமர் சிலை செய்யப்பட்டது.

Ram Lalla Idol Came From Dalit Farmers Land In Karnataka

சுமார் 51 அங்குலம் உள்ள அச்சிலையை வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்ட கருங்கல், மைசூரு அருகே உள்ள குஜ்ஜேகவுடனாபுரா கிராமத்தில் உள்ள 70 வயதான ராம்தாஸ். ஹெச் என்பவரின் நிலத்திலிருந்துதான் கிடைத்துள்ளது.

இது பற்றிப் பேசிய விவசாயி ராம்தாஸ், "எனக்கு 2.14 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மண்டிக்கிடந்த பாறைகளை விவசாய வேலைகளுக்காக அகற்ற விரும்பினேன். அதற்கான வேலையை உள்ளூர் குவாரி ஒப்பந்ததாரரிடம் கொடுத்தேன். அவர்தான் கடும் பாறைகளை நிலத்திலிருந்து அகற்றினார்.

Ram Lalla Idol Came From Dalit Farmers Land In Karnataka

அந்தப் பாறைகளிலிருந்து ஒன்றை ராமர் சிலையை உருவாக்குவதற்காகச் சிற்பி யோகிராஜ் தேர்ந்தெடுத்தார்" என்று இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ராம் லல்லா சிலையை வடிவமைப்பதற்காகத் தனது நிலத்தில் கிடைத்த கல்லைப் பயன்படுத்தியதற்காக மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ள தலித் விவசாயி, தனது கிராமத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காகத் தனது நிலத்தின் ஒரு பகுதியையும் நன்கொடையாக வழங்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.

Ram Lalla Idol Came From Dalit Farmers Land In Karnataka

உலகமே வியக்கும் வண்ணம் சிலையை வடிவமைப்பதற்காகக் கல்லைக் கொடுத்த இந்த விவசாயிக்கு, கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் இப்போது எழுந்துள்ளது.

Ram Lalla Idol Came From Dalit Farmers Land In Karnataka

இவரது நிலத்தில் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொண்ட உள்ளூர் குவாரி ஒப்பந்ததாரர் ஸ்ரீனிவாஸ் நட்ராஜ், "பெரியதாகக் கிடைத்த ஒரு பாறையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

அதில் ஒன்றைத்தான் சிற்பி யோகிராஜ் சிலை செய்வதற்காகத் தேர்வு செய்தார். இப்போது பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னர் ஆகிய கடவுள்களின் சிலைகளைச் செதுக்குவதற்காக மீதம் இருந்த அந்தக் கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

Ram Lalla Idol Came From Dalit Farmers Land In Karnataka

இதில் கொடுமை என்னவென்றால் நாடே வியக்கும் இவ்வளவு பெரிய காரியத்திற்காகக் கருங்கல்லை வழங்கியவர்கள் அம்மாநில அதிகாரிகள் அபராதம் வித்துள்ளனர் என்பதுதான். அந்தக் கொடுமை பற்றிப் பேசுகையில் "நிலத்தில் சட்டவிரோதமாக குவாரி நடத்தியதற்காகச் சுரங்கம் மற்றும் புவியியல் துறை தனக்கு ரூ.80,000 அபராதம் விதித்துள்ளது" என்கிறார் நட்ராஜ்.

கல் விநியோகம் செய்வதற்கு முன்னர் சிலர் தந்த தகவலின் அடிப்படையில் அந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் கல்லை அயோத்திக்குக் கொண்டு செல்வதற்காக இவர் ரூ.6 லட்சம் செலவழித்துள்ளார். ஆனால் ராமர் கோயில் அறக்கட்டளை பிரதிநிதியான ஸ்ரீநாத்திடம் இருந்து நடராஜூக்கு வெறும் ரூ.1.95 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது. இவருக்கும் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் நட்ராஜ்.

Ram Lalla Idol Came From Dalit Farmers Land In Karnataka

ராம் லல்லா சிலைக்கான கல்லைத் தேர்ந்தெடுக்கும்போது ராமரின் தோலின் நிறம் குறித்து அதிக விவாதம் நடந்துள்ளது. இதற்காக மூன்று சிற்பிகளுக்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கணேஷ் பட் மற்றும் அருண் யோகிராஜ் ஆகியோர் கர்நாடகாவிலிருந்து பெறப்பட்ட கருநீல சாம்பல் நிறம் கொண்ட கல்லில் சிலையைச் செதுக்கியுள்ளனர்.

Ram Lalla Idol Came From Dalit Farmers Land In Karnataka

அடுத்து சத்யநாராயண் பாண்டே ராஜஸ்தானிலிருந்து மக்ரானா பளிங்கு மூலம் ஒரு வெள்ளை சிலையை வடிவமைத்தார். இறுதியாக இவர்களின் சிலைதான் தேர்வாகி உள்ளது.

இந்தக் கருப்பு நிற சிலையைப் பயன்படுத்துவதன் மூலம், தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினரை பாஜக தன்வயவைப்படுத்த முயல்வதாக விமர்சனப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+