ராமதாஸ் ரூட் கிளியர்? முடிவை மாற்றுகிறாரா டாக்டர் அய்யா? வட மாவட்ட 5% பாமக வாக்கு வங்கி.. 100% மௌனம்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்னமும் தன்னுடைய கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை.. யாருடன் கூட்டணி என்பதை சொல்லாமலேயே உள்ளார்.. இந்த இழுத்தடிப்புகளுக்கான காரணங்கள் என்னென்ன? எப்போது முடிவை அறிவிப்பார்??? ராமதாஸ் தரப்புக்கு தற்சமயம் சாதகமான உள்ள சூழல்கள் என்னென்ன???
அதிமுக, திமுகவில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு வந்துவிட்டன.. ஆனால், தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் கடைசி நேரக் காய்நகர்த்தல்களாக ராமதாஸ், தேமுதிக, ஓபிஎஸ் போன்றோர்கள் சிக்கி உள்ளனர்.

வாக்கு வங்கி சிதைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் சொன்னாலும், இவர்களின் மௌனம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை காத்திருப்பில் விட்டுள்ளது..
கூட்டணி முடிவு
தைலாபுர தோட்டத்தைப் பொறுத்தவரை, அன்புமணி ராமதாஸ் என்னதான் 'மாற்றம்' குறித்துப் பேசினாலும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இன்னும் டாக்டர் ராமதாஸின் வசமே இருக்கிறது. பாமகவிடம் இருக்கும் 5% வாக்குகள் வடமாவட்டங்களில் எந்தவொரு கூட்டணியின் வெற்றியையும் உறுதிப்படுத்தும் வல்லமை கொண்டவை.
அதனால்தான் பாஜக ஒருபுறம் அன்புமணியிடம் பேசி முடித்தாலும், ராமதாஸின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்காமல் இழுபறி நீடிப்பதாகவே தெரிகிறது..
தைலாபுர தோட்டம் - திமுக
அதேசமயம் திமுகவும், புதிதாக களம் கண்டுள்ள தவெகவும் தைலாபுரத்தை நோக்கித் தூது விடுவது, ராமதாஸின் டிமாண்ட் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.
வடமாவட்டங்களில் தன்னுடைய பிடி தளரவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஒரு களமாக இந்த தேர்தலை டாக்டர் அய்யா அணுகுவதாக தெரிகிறது..
அன்புமணி ராமதாஸை முன்னிறுத்தி பாஜகவுடன் ஒரு பக்கம் பேசி வந்தாலும், திமுக தரப்பிலிருந்து வரும் அழைப்புகளை அவர் உடனே நிராகரிக்காததற்கு முக்கிய காரணம், தன்னுடைய கட்சிக்கு கிடைக்கும் சீட்களின் எண்ணிக்கையை விட, அந்த இடங்களில் வெற்றி வாய்ப்பு யாருடன் இருந்தால் உறுதியாக இருக்கும் என்பதுதான். அதனால்தான் இவ்வளவு டைம் எடுத்து கொள்வதாக தெரிகிறது..
அதிமுக - பாஜக கூட்டணி
இதில் ராமதாஸுக்கு மிகவும் சாதகமான, பழக்கப்பட்ட களம் என்றால் அது அதிமுக தலைமையிலான கூட்டணிதான்... அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிட்டதாக செய்திகள் கசிந்தாலும், இட ஒதுக்கீடு போன்ற சமூக கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரத்தை பலப்படுத்த நினைப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
அதுமட்டுமல்ல, அதிமுக கூட்டணியில் சேரும்போது பாமகவால் வட மாவட்டங்களில் அதிக இடங்களை பெற்று, தன்னுடைய வெற்றி சதவீதத்தை உயர்த்தி காட்ட முடியும், இதனால் கட்சியின் மாநில அந்தஸ்தையும் தக்கவைக்க முடியும் என்றும் டாக்டர் அய்யா நம்புவதாக தெரிகிறது.. அத்துடன் பாஜகவும் இந்த கூட்டணியில் இருந்தால், மத்தியில் ஆளும் தரப்பின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும் என்பதும் ராமதாஸின் கணக்காக இருக்கலாம்.
ராமதாஸின் தயக்கம்
இன்னொரு பக்கம் திமுகவுடன் இணைவது ராமதாஸுக்கு ஒருவித பிளஸ்தான்.. ஆனால், அங்கு ஏற்கனவே பல கட்சிகள் உள்ளதால், பாமக கேட்கும் அதிகப்படியான தொகுதிகள் கிடைப்பது சந்தேகம்தான்..
அதேபோல தவெக விஜய்யுடன் கூட்டணி வைப்பது ஒருவித ரிஸ்க்தான்.. புதிய வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாகக் கருதப்படுவதால், பாமகவின் பழைய வாக்கு வங்கியும் விஜய்யின் இளைய தலைமுறை வாக்கு வங்கியும் இணைந்தால் அது ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடும்... ஆனால், இது எந்த அளவுக்கு ரிசல்ட் தரும் என்று தெரியாது.. ராமதாஸின் தயக்கத்திற்கு இதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்..
மூன்று ஆப்ஷன்கள்
சுருக்கமாக சொன்னால், அதிக இடங்கள் + உறுதி செய்யப்பட்ட வெற்றி + வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த வாக்குறுதி, இந்த 3 விஷயங்களும் எங்கே கைகூடுகிறதோ அங்கேயே தன்னுடைய பச்சை கொடியை காட்டுவார் ராமதாஸ்..
அந்தவகையில், தற்போதைய சூழலில், அதிமுக-பாஜக கூட்டணிதான் லாபகரமான ஆப்ஷனாக டாக்டர் அய்யாவுக்கு இருப்பதாக தெரிகிறது.. என்ன முடிவெடுக்க போகிறார் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications