அதிகார சாதிகள் விட்டுத்தரல.. 983 சாதிகள் பாவம்! ஒபிசி உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த சொல்லும் ராமதாஸ்
சென்னை: நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் ஓபிசி உள்இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், "மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை 6 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மிகவும் தாமதம் என்றாலும், இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

இந்தியாவில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும் கூட பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையான மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இந்த சமூக அநீதி குறித்து பல ஆண்டுகளாகவே பாமக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில் தான், அது பற்றி ஆய்வு செய்யவும், உள் ஒதுக்கீடு பற்றி பரிந்துரைப்பதற்காகவும் 02.10.2017 அன்று நீதிபதி ரோகிணி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதங்களில் அதாவது 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்குள் ஆணையம் அறிக்கை அளித்திருக்க வேண்டும்.
ஆனால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டுமானால், அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான் தீர்வு ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தான் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆனால், ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 6 ஆண்டுகள் தாமதமாகி விட்ட நிலையில், இனியும் தாமதிக்காமல், பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூகநீதியாக அமையும். ஓபிசி உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஓபிசி வகுப்பினருக்கு செய்யப்படும் சமூக அநீதியாகவே பார்க்கப்படும்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசரத்தையும் வலியுறுத்துவதற்காக சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஓபிசி வகுப்பில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. அவர்களில் 983 சாதிகளுக்கு, அதாவது 37.33 விழுக்காட்டினருக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டால் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
அதேபோல், மேலும் 994 சாதிகளுக்கு, அதாவது 37.75 விழுக்காட்டினருக்கு 2.66% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளில் 75 விழுக்காடான 1977 சாதிகளுக்கு 2.66% இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இது மிகக்கொடிய சமூக அநீதியாகும். அதேநேரத்தில், மற்றொருபுறம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன.
மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன. அதாவது, ஓபிசி வகுப்பில் 5.60 விழுக்காடு சாதிகள், 75.02 விழுக்காடு பயன்களை அனுபவிக்கின்றன. இத்தகைய சமூக அநீதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது சமூக நீதிக்கும் பொருந்தும். மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களால் இன்னும் 12 விழுக்காடு பிரதிநிதித்துவத்தைக் கூட எட்ட முடியவில்லை.
அதற்கு காரணம் ஏற்கனவே, அரசு வேலைவாய்ப்புகளை அனுபவித்து வரும் சமூகங்கள், தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, வேலைவாய்ப்புகளை விட்டுத் தர மறுப்பது தான். ஓபிசி உள் இட ஒதுக்கீட்டிலும் இதே சூழல் தொடரும். எந்த அளவுக்கு விரைவாக உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு சமூகநீதி கிடைக்கும்.
இந்த உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, தற்போது மத்திய சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதன் மூலம், அதன் விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஓபிசி உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை அடுத்தக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை












Click it and Unblock the Notifications