கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்.. கடைசி இடத்துக்கு கொண்டு வாங்க.. டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு கொண்டு வருமாறு மக்களிடம் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக ஆட்டம் போட்ட கொரோனா தற்போது கொஞ்சம் ஓய்வெடுத்து ஆறுதல் அளித்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 36,000-ஐ கடந்து சென்று அச்சுறுத்திய நிலையில் இப்போது 17,000-க்குள் அடங்கி விட்டது.

தமிழகம் முதல் இடம்
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு வாரம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் காரணமாகவே கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் இன்னும் வைரஸ் நமது கட்டுக்குள் வரவில்லை. ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழகம் தான் 17,000 தினசரி பாதிப்புகளுடன் முதலிடம் பிடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

தளர்வுகள் அளிக்கப்பட்டன
தினசரி பாதிப்பில் நமது அண்டை மாநிலமான கேரளா 15,000 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிக பாதிப்பு கொண்டதாக விளங்கிய மஹாராஷ்டிரா 10,000 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மால்கள், பெரிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆனால் சிலர் இந்த தளர்வுகளை தவறாக பயன்படுத்தி தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். ''ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீர்கள். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. கொரோனா இன்னும் குறையவில்லை'' என்று சென்னை உயர்நீதிமன்றமும் நேற்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைய மக்கள் ஒத்துழைக்கும்படி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ் வேண்டுகோள்
ராமதாஸ் வேண்டுகோள்
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' மக்களே சிந்திப்பீர்.... செயல்படுவீர்!
தேசிய அளவிலான தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பது மிகவும் நிம்மதியளிக்கிறது. ஆனாலும், தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு தான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கேரளாவுக்கு இரண்டாவது இடம்! முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு வர தமிழ்நாட்டு மக்களாகிய உங்களால் முடியும். உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளையும், ஊரடங்கையும் கடைபிடியுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்த உதவுங்கள்! என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications