அன்புமணியை செயல் தலைவர் என அழுத்தி சொன்ன ராமதாஸ்! செயல்பட முடியாவிட்டால்.. ! ஐயா சொன்ன அந்த வார்த்தை

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்: மாநாட்டில் வேலை செய்த களைப்பால் சிலர் இருப்பதால் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. இந்த கூட்டத்திற்கு செயல் தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்திற்கு வரலாம், வந்து கொண்டிருக்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss

தைலாபுரம் தோட்டத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கவில்லை. அது போல் அவரது ஆதரவாளர்களும் முக்கிய தலைவர்கலும் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. 101 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில் வெறும் 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அது போல் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். அன்புமணியின் விருபபத்திற்கு மாறாக கூட்டப்பட்ட கூட்டம் என்பதால் பாமக மாவட்டச் செயலாளர்கள் வரவில்லை.

ராமதாஸ்

இந்த நிலையில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் படுத்துக் கொண்டே ஜெயிக்கும் வித்தைகளை சொல்லிக் கொடுத்தேன்.

50 தொகுதிகள்

50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்ள கூடிய கூட்டம் இது. தனித்து போட்டியிட்டாலும் குறைந்தது 40 தொகுதிகளிலாவது பாமக வெற்றி பெற வேண்டும்.

சிங்கத்தின் கால்கள்

இந்த சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லை. சீற்றம் அதிகமாகதான் இருக்கும்.
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அந்த சீற்றம் ,எண்ணம் அதிகமாகி கொ1ண்டே இருக்கிறது என்றார். அப்போது நிறைய நிர்வாகிகள் இந்த கூட்டத்திற்கு வரவில்லை, அன்புமணியும் வரவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மாநாட்டு களைப்பு

அதற்கு ராமதாஸ், மாநாட்டில் வேலை செய்த களைப்பில் சிலர் வராமல் இருந்திருக்கலாம். சிலர் என்னுடன் தொலைபேசியில் அழைத்து வராததற்கான காரணத்தை தெரிவித்துவிட்டார்கள். செயல்தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.அவர் வரலாம் அல்லது வந்து கொண்டிருக்கலாம் என்றார்.

கூட்டத்திற்கு வரவில்லை

கூட்டத்திற்கு வராதவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அவர்களாகவே விரும்பும் வரை யாரையும் நீக்கத் தேவையில்லை. செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியபடி மாற்றப்படுவார்கள். பாமகவில் கோஷ்டி மோதல் கிடையாது. நிச்சயம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி அமையும் என தெரிவித்தார்.

சித்திரை முழு நிலவு மாநாடு

பாமக சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 11 ஆம் தேதி நடந்தது. மாமல்லபுரத்தில் நடந்த இந்த மாநாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு என மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

50 ஆண்டுகளாக உழைப்பு

அப்போது ராமதாஸ் பேசுகையில், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு போராட்டம் அறிவிக்கப்படும். 50 ஆண்டுகளாக உங்களுக்கு உழைத்து வருகிறேன். நாமும் ஒரு முறை இந்த தமிழகத்தை ஆள வேண்டும் என எண்ணத்தோடு என் பேச்சைக் கேளுங்க. எனக்கு பதவி ஆசையிருந்திருந்தால் நான் எப்போதோ கவர்னாக இருந்திருப்பேன், பல முறை அமைச்சராகியிருப்பேன், தமிழகத்தையும் ஆண்டிருப்பேன். ஆனால் எனக்கு அந்த ஆசையெல்லாம் போய்விட்டது.

அன்று 4 தொகுதிகள்

அன்று தனியாக 4 தொகுதிகளில் வென்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இது நமக்கு அசிங்கமா இல்லையா? நம்ம ஆளுங்க நமக்கே ஓட்டு போடல. எனக்கு 87 வயது. கிழவனுக்கு வயசாகிடுச்சுனு ஏமாற்றப்பார்க்காதீர்கள். ஒழுங்காகக் கட்சியைப் பலப்படுத்துங்கள். என்னால் உழைக்க முடியாது என்பவர்கள் சொல்லுங்கள், வேறு ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கிறேன் என மிகவும் காட்டமாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+