ஒற்றுமையா இருப்போம்... ஏக சந்தோஷத்தில் டாக்டர் இருக்கிறார் போலும்.. சும்மாவா... 7+1 ஆச்சே!!

ஒற்றுமை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய நன்னாளில் "ஒற்றுமை" குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு நாள் யாருடன் கூட்டணி என்று சொல்லவில்லை. உத்தேசித்து எழுதினால் அப்படியெல்லாம் யூகித்து எழுதப்படக்கூடாது என்று அறிவுரை சொன்னார். அதனால் பதிவிடும் வெளிநாட்டு பொன்மொழிகள் ட்வீட்களை வைத்து குத்துமதிப்பாக மக்களே தங்கள் அறிவுக்கு எட்டியவரையில் அதை புரிந்து கொண்டார்கள்.

 Ramadoss tweet about Unity

அந்த ட்வீட்களில் கூட்டணிக்கு அழைப்பு முதல் யார் யாரை என்ன சொல்லணுமோ, விமர்சிக்கணுமோ, பாராட்டணுமோ, எல்லாவற்றையும் சொல்லி முடித்தாயிற்று. கடைசியாக கூட்டணியும் முடிந்து அது சம்பந்தமாக வந்த கருத்துக்கு "பொறாமை" என்ற தலைப்பில் பதிலடியும் தந்தாயிற்று.

இப்போது அடுத்த கட்ட வேளையில் இறங்கிவிட்டார் டாக்டர். அதாவது இனி நடக்க போகிற விஷயங்களில் கவனம் செலுத்த போகிறார் என்பது தெரிந்து விட்டது. சுருக்கமாக சொன்னால், இப்போது அமைத்துள்ள கூட்டணியை வைத்து இந்த ட்வீட் போட்டுள்ளார்.

அதில், "ஒற்றுமை தான் வலிமை. அணியாக இணைந்து பணியாற்றும் தன்மையும், ஒத்துழைப்பும் இருந்தால் அற்புதமான விஷயங்களை நிகழ்த்த முடியும்!- மேட்டி ஸ்டெபனெக்" என்று பதிவிட்டுள்ளார்.

இனிமேல் அதிமுக-பாஜக-பாமக என எல்லோரும் ஒத்துமையா இருந்து அற்புதமான விஷயங்களை நடத்த போவதாக சிம்பாலிக்காக கூறியுள்ளார். ஏக சந்தோஷத்தில் டாக்டர் இருக்கிறார் போலும்! சும்மாவா... 7+1 ஆச்சே!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+