உயிர்களை கருக்கும் பட்டாசு.. ரூல்ஸை கடுமையாக்குங்க.. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் ராமதாஸ்!
சென்னை: அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் விதிகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் தமிழ்நாட்டின் ஓசூர் பேடரப்பள்ளியைச் சேர்ந்த நவீன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்த பட்டாசு கடை, குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறின. இந்த விபத்தால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பெரும் போராட்டத்துக்கு பின் அணைத்தனர்.

இந்த விபத்தில் முதலில் 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக பலி எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று நள்ளிரவு வரை பலி எண்ணிக்கை 13 ஆக இருந்தது. இன்று காலை வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலியான அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கிருஷ்ணகிரி, விருதுநகர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை என பல்வேறு மாவட்டங்களிலும் வெடி விபத்துகள் நிகழ்ந்து பலர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications