’ரஞ்சிதமே’ இந்த பாடலின் காப்பியா? வசமாய் சிக்கிய ‘வாரிசு’! தாறுமாறாக தமனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சென்னை : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ள நிலையில் அது பழைய பாடலின் காப்பி எனவும், தெலுங்கில் கலக்கி வரும் இசையமைப்பாளர் தமன், தமிழுக்கு மட்டும் காபி சாங்கை கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் வைத்து பார்க்கப்படுபவர் விஜய். இளைய தளபதியாக அறிமுகமாகி தற்போது தளபதி என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் உருவ கேலி, தொடர் தோல்விகள் என துவண்டு போயிருந்த விஜய் பூவே உனக்காக படத்திற்கு பிறகு தமிழ் திரை உலகின் முன்னணி நாயகனாக உருவானார். அதற்கு அவரது தந்தையின் பங்கும் அதிகம்.

நடிகர் விஜய்
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களில் சாக்லேட் பாயாக நடித்து ரசிகைகள் மனதில் இடம் பிடித்தவர். அடுத்து திருமலை, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட ஆக்சன் படங்களில் புதிய அவதாரம் எடுத்து தற்போதைய நிலையில் தமிழகத்தின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக திகழ்கிறார்.

வாரிசு
இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ரஞ்சிதமே' நேற்று யூடியூபில் வெளியானது. தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

ரஞ்சிதமே
இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யுடன், மானசி எம்எம் பாடியிருக்கிறார். பாடலை விவேக் எழுத யூட்யூபில் மில்லியன் கணக்கானோர் பாடலை பார்த்து வருகின்றனர். விஜய்யின் குரல் நடனம் பாடலுக்கு வலு சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் பாடல் ஒரு பழைய படத்தில் இடம் பெற்ற பாடலின் காப்பி என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாட்டு காப்பியா?
பாடலில் இடையில் வரும் மெட்டுக்கள் கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் மெகா ஹிட் அடித்த 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் மெட்டு எனவும் அதை தெரியாமல் சுட்டு இசையமைப்பாளர் தமன் தனது பாடலில் பயன்படுத்தியிருப்பதாக விமர்சித்து வருகின்றனர். தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள தமன் தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

இசையமைப்பாளர் தமன்
அவருடன் நடித்த நடிகர்கள் நடிகர்களாகவே தொடரும் நிலையில் தமன் மட்டும் இசை பாதையை தேர்ந்தெடுத்து தெலுங்கில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதே நேரத்தில் தமிழில் அதுவும் நடிகர் விஜய்க்கு இசையமைத்திருக்கும் அவர் ஹிட் பாடல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது தான் அதற்காக தமிழ் பாடலையே சுட்டு மெட்டமைப்பதா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications