ஐபிஎல் தொடர்.. பிரம்மாண்டமாக நடக்கும் தொடக்க விழா.. நடனத்தில் அசத்த உள்ள ராஷ்மிகா, தமன்னா!
ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் நடனமாட உள்ள நட்சத்திரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான தொடக்க விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடவுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் வரும் 26ம் தேதிக்குள் அனைத்து வீரர்களும் பயிற்சியில் இணைய அந்தந்த அணிகள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர்
அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இம்பேக்ட் பிளேயர் விதிமுறை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டாஸ் போட்ட பின்னரும் அணிகளை மாற்றும் வகையில் விதிகள் கொண்டு வரவுள்ளது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொண்டாட்டங்கள்
அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடக்க விழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் போட்டிகள் தொடங்கப்பட்டது. அதேபோல் ஐபிஎல் தொடக்க காலத்தில் அங்கம் வகித்து வந்த பாலிவுட் நடிகர்களும் பெரியளவில் பங்கேற்காமல் இருந்தனர்.

மகளிர் ப்ரீமியர் லீக்
இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடக்க விழாவை மீண்டும் தொடங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நடந்த மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில், பிரம்மாண்டமாக தொடக்க விழா நடைபெற்றது. பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, கிர்த்தி சனோன் ஆகியோர் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

ராஷ்மிகா, தமன்னா
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவை மேலும் பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. மீண்டும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள், நடிகர்களின் நடன நிகழ்ச்சியை அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடனமாட வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications