ரத்தன் டாடாவின் ஈர மனசு நீளுது.. ஏர் இந்தியா விமானத்தை காலி பண்ண கங்கணம்? அவப்பெயரில் டாடா குழுமம்?
சென்னை: அகமதாபாத் விபத்துக்கு பிறகு டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு வருவதால், அந்த நிறுவனம் தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.. அதுமட்டுமல்ல, பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து முறையாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்..
கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் போயிங் விமானம் 787-8 ட்ரீம்லைனர், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே, தொடர்ந்து மேலே பறக்க முடியாமல் விபத்துக்குள்ளானது.

அருகிலிருந்த மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்ததில், 274 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணத்தை டாடா குழுமம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு DNA பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து மத்திய அரசின் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இதயத்தை நொறுக்கும் விஷயம்
இது தொடர்பாக நேற்றைய தினம் அவர் சொல்லும்போது, "இதயத்தை நொறுக்கும் விஷயம் இது. விமான விபத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நாம் என்ன சொன்னாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது.குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன்.
அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும், உதவி செய்வேன். விமான விபத்திற்கு எஞ்சின் கோளாறு காரணமில்லை. அனுபவம் வாய்ந்த விமானிகளே விமானத்தை இயக்கினார்கள்.. முதற்கட்ட விசாரணை முடிவு வரும்வரை, விபத்திற்கான முழுக்காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வர இயலாது" என்று தெரிவித்திருக்கிறார்.
இழப்பீடு - மருத்துவ கல்லூரி விடுதி
அதுமட்டுமல்ல, விபத்து நடந்த தினத்தன்றே டாடா குழு தலைவர் சந்திரசேகரன், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் 1 கோடி ரூபாய் வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஈடுகட்டுவோம். தேவையான அனைத்து பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வோம். சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் என்று அறிவித்திருந்தார்..
இந்த அறிவிப்புக்கு பல தரப்பினர் ஆதரவையும் வரவேற்பையும் கூறியிருந்தனர்.. எனினும், தொடர்ந்து டாடா குழுமம் மீதான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், Cheyyaru balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, டாடா குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஏர் இந்தியா - ரத்தன் டாடா
அதில், விபத்துக்கு பிறகு ஒருவித பீதியுடன்தான் பயணிகள் விமானத்தில் பயணித்து வருகிறார்கள்.. இந்த விபத்துக்கான காரணம் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.. எனினும், ஏர் இந்தியா நிறுவனம், டாடாவிடம் சென்றபிறகுதான் இப்படியான விபத்துகள் நடந்துள்ளதாகவும் விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் நிலவுகின்றன.
சாமானியர்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டியவர் மறைந்த ரத்தன் டாடா.. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.. காரை நம்மால் வாங்க முடியுமா? என்று பலரும் கனவு கொண்டிருந்த நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு காரை தந்தவர் டாடா,. அப்படிப்பட்ட ரத்தன் டாடா குழுவினருக்கு இன்று அவப்பெயர் வந்துள்ளதை ஜீரணிக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
காலி செய்ய திட்டம்?
அதேபோல, Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சுபைர், "நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா நிறுவனம், கையில் எடுத்தது.. தனியார் நிறுவனத்துக்கு நிகராக, ஏர் இந்தியா விமானத்தை மாற்றியது டாடா.. குறிப்பாக, போயிங் 707 என்ற புது வெர்ஷனை 500 விமானங்களை, லோக்கல் பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. நிறைய ஆஃபர்கள், வசதிகளை டாடா செய்துள்ளது..
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த விபத்தானது, மிகப்பெரிய பின்னடைவை ஏர் இந்தியாவுக்கு தந்துள்ளது. ஆனால், இந்த விபத்தை காரணம் காட்டி, ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாக காலி செய்ய எதிர் நிறுவனங்கள் திட்டமிடுமா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இது மிகப்பெரிய விஷயம்
அதேபோல 4 நாட்களுக்கு முன்பு, King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் ரத்தன் டாடா குறித்து பேசியிருந்தார்..
"டாடா குழுமம் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி வரை நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.. உயிர் போனது போனதுதான், திரும்பி வராது.. ஆனால், அரசாங்கம் செய்ய வேண்டியதை டாடா செய்கிறது..
இந்தியர்கள் எப்போதும் மென்மையானவர்கள்தானே. பெருந்தன்மையுடன் டாடா இதனை செய்கிறது. ரத்தன் டாடா மறைந்தபிறகும் அந்த நிறுவனங்கள் அவருடைய மனநிலைமையிலேயே செயல்பட்டு வருவது மிகப்பெரிய விஷயம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications