சர்க்கரை அட்டைதாரர்களே.. ரேஷன் கடைகள் இனிமேல் இந்த நாட்களில் விடுமுறை? விரைவில் தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசனை ஒன்று தமிழக அரசு தரப்பில் நடந்து வருவதாக தெரிகிறது.. என்ன காரணம்?
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர். இதைத்தவிர பண்டிகை காலங்களில், துவரம் பருப்பு, பாமாயில் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன..

அந்தவகையில், ரேஷன் கடை ஊழியர்களின் பணிகள் அபரிமிதமானது.. பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
என்ன காரணம்: இதனால் ரேஷன் கடைகளை விடுமுறையின்றி திறந்துவைத்திருக்க வேண்டியிருக்கிறது. வேலைநாட்களுக்கு பதிலாக, வேறு நாட்களில் அந்த விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு ஈடுகட்டப்படுகின்றன.
ரேஷன் கடைகளின் நேரம் கிராமப்புறங்களில் ஒரு மாதிரியும், நகர்புறங்களில் வேறு மாதிரியும் இருக்கும். நகர்ப்புறங்களில் காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரைக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.. பிறகு மதியம் 3 மணியிலிருந்து 7 மணி வரைக்கும் பொருட்கள் வழங்கப்படும்.. கிராமப்புறங்களில் காலையில் 9லிருந்து 1 மணி வரையும், பிறகு 2 மணி முதல் 6 மணி வரையிலும் பொருட்கள் விநியோகிக்கப்படும்.
விடுமுறையா: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களும் விடுமுறை வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.. இந்த கோரிக்கையை அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்திருக்கிறதாம்..
வெள்ளிக்கிழமை: கடந்த 2014ல் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதில், அலுவலகம் செல்வோர் ரேஷன் பொருட்கள் வாங்க வசதியாக, மாதத்தின் முதலாவது, 2வது ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும், அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டது... அதே நடைமுறைதான் இப்போதும் அமலில் உள்ளது.
ஆனால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றனவாம். இதனால், விடுமுறை கிடைப்பதில்லையாம்... அதுமட்டுமல்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக்குறைந்த ரேஷன்தாரர்களே பொருட்களை வாங்க வருகிறார்களாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ரேஷன்கார்டு: இதுகுறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்பதால், இதுதொடர்பாக, ரேஷன் கார்டுதாரர்கள் கடை ஊழியர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க, உணவு மற்றும் கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே லீவு கிடைக்கும்போது, எப்படி ரேஷன் பொருட்களை வாங்குவார்கள்? என்றும் அலுவலகம் செல்பவர்கள் கேட்கிறார்கள்???
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications