ரேஷனில் மாற்றம் வருது.. ஒரே மாசம்தான்.. அதைவிடுங்க.. கோட்டைக்கு போன குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கை
சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் மாற்றம் வரப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி உணர்வு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயல் இழந்து விடுவதால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றவாம்.. எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக உணவுத்துறை தெரிவித்து வருகிறது.
உணவுப்பொருட்கள்: அந்தவகையில், கடந்த மாதம் அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், இன்னும் 2 மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி கூறியிருந்தார்..

இந்த தகவல் வெளியான அடுத்த சில தினங்களிலேயே, ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகள், வரும் 2024ம் ஆண்டு ஜனவரி முதலே துவங்க போவதாகவும், அடுத்த 3 மாதத்துக்குள் மொத்த பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகளும் வெளியாகியிருந்தன.
உரிமைத்தொகை: ஆனால், புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் பற்றி எந்தவொரு உறுதியான தகவலையும் அதிகாரிகள் வழங்கவில்லை.. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது ரேஷன்தாரர்களிடம் அதிருப்தியை தந்து வருகிறது.
"புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம்" என்று வட்ட வழங்கல் அதிகாரிக்கு, உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள்.
புது கார்டுகள்: அதுமட்டுமல்ல, இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளுமே, சமீப காலமாகவே நடக்கவில்லை என்ற அதிருப்தியும் பொதுமக்களிடம் உள்ளது. வழக்கமாக, புதிய ரேஷன் கார்டு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் புதுகார்டு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தும், புது கார்டுகள் வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
பலமுறை உணவுத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காததால், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வருகிறோம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
உணவு வழங்கல் துறை: அதுமட்டுமல்ல, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாகவும், ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நிற்பதாகவும் தற்போது புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.. இதனால், கடந்த 4 மாதங்களாகவே, தங்களால் பொருட்களை வாங்க முடியவிலை என்றும் புலம்பல்கள் வெடித்து வருகின்றன.
எனவே, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்குரிய, ஒரு லட்சம் கார்டுகளை அச்சடிக்க வேண்டும் என்றும் புதிய ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்குமாறும், தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்க துவங்க உள்ளனர்.
நம்பிக்கை: "புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு குறித்து இதுவரை தங்களுக்கு அறிவிப்பு வெளியாகவில்லை.. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன், கள ஆய்வு பணிகளை தொடங்குவோம்.. ஆன்லைன் வழியாகவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" என்று ஏற்கனவே உணவு வழங்கல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications