Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேசனில் கருவிழி சரிபார்ப்பு.. இனி ரேஷன் பொருட்களை "இப்படித்தான்" வாங்கணுமாம்.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக அரசு இன்னொரு அதிரடியை கையில் எடுக்க போகிறதாம்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

Ration Card Holders and Tamil Nadu Government says about Iris Registration in the Ration Shops

அதுமட்டுமல்ல, விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

பொதுமக்களின் நன்மைக்காக இப்படி பல்வேறு அதிரடிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இன்னொரு முன்னெடுப்பையும் தமிழக அரசு செய்துள்ளது. அதன்படி, இன்னும் 2 மாதங்களில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரப்போகிறதாம்.. இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்திருந்தார்.

கருவிழி: அப்போது அவர் சொன்னது, "பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்று கூறியிருந்தார்.

அதேபோல, கடந்த வாரம் திருச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, இதுகுறித்து கூடுதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ரேஷனில் விரல் ரேகை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் நடைமுறை உள்ளது.

நம்பிக்கை: முதற்கட்டமாக, கருவிழியை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் பெறும் நடைமுறை, 36,000 ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.. இன்னும் 2 மாதங்களில், தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்" என்று உறுதிபட கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொது விநியோக திட்ட இணையதளம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை ஒயாசிஸ் என்ற தனியார் நிறுவனம்தான் இதுநாள் வரை மேற்கொண்டு வந்தது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 செப்டம்வரை ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.

புதிய நிறுவனம்: எனவே, புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், 4 நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது..

இதையடுத்து, ரேஷன் கார்டுதாரர்களின் கருவிழியை சரிபார்த்து பொருட்கள் வழங்கும் கருவிகள், ரசீது வழங்கும் பிரிண்டர் சாதனம், புதிய விற்பனை முனைய கருவிகள் பொருத்த வேண்டும் என்றும், அதற்கான மென்பொருளை தயாரித்து 5 வருடங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் இந்த நிறுவனத்துக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விரைவில் ஆரம்பம்: ஆக, டெண்டரும் முடிவாகி உள்ள நிலையில், அமைச்சர் உறுதி தந்ததுபோல, ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+