ரேஷன்தாரர்களுக்கு வந்த அறிவிப்பு.. "இந்த நாளில்" ரேஷன் கடைகள் இயங்காது, விடுமுறை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. ரேஷன் கடைகள் விடுமுறை குறித்து மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பண்டிகை காலங்களிலும் சிறப்பு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை: அந்தவகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக உள்ளதால், இதுகுறித்த தீபாவளி சிறப்பு அறிவிப்புகளை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி எதுவுமே தகவல் வரவில்லை. எனினும், தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை மக்கள் முன்கூட்டியே வாங்குவார்கள் என்பதால் தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பண்டிகை காலங்களில் மக்களின் தேவைகளின் அடிப்படையில் விடுமுறையின்றி இயங்க வேண்டும் என்றும் ரேஷன் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
விடுமுறை அறிவிப்பு: பொதுமக்களும் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படியே தீபாவளியை ஒட்டி ரேஷன் கடைகள் தமிழகம் முழுவதும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் செயல்பட்டு வந்தன.
தொடர்ச்சியாக ரேஷன் கடைகள் கடைகள் விடுமுறையின்றி இயங்கியதற்கு ஈடாக, அடுத்து வரும் நாட்களில் ரேஷன் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்திருந்தது.
அதன்படியே, நவம்பர் 13ம் தேதி தீபாவளிக்கு மறு நாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை போல் நவம்பர் 25ம் தேதி விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நாளை அதாவது சனிக்கிழமை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications