தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் நியூஸ் சொல்லும் தமிழக அரசு.. இனி ரேஷன் கடைகளில் "இவை" இலவசமாம்!
சென்னை: தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் துவரம் பருப்பும் பாமாயிலும் இலவசமாக கிடைக்க போகிறதாமே.
ரேஷன் கார்டுகள் வைத்திருப்போருக்கு அவருடைய கார்டின் வரம்பை பொருத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

வடஇந்தியர்கள் புலம் பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருப்பதால் அவர்களுக்காக கோதுமையும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே அரிசி அல்லது கோதுமையை அவர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பும் வழங்கப்படுகிறது. அது போல் சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 30க்கும் பாமாயில் ஒரு பாக்கெட் 25 ரூபாய்க்கும் சர்க்கரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும் மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மத்திய அரசு வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ 200 குறைத்துள்ளது.
அது போல் உஜ்வாலா திட்டத்தின்படி மானியத்தை ரூ 200 ஆக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இவை எதிரொலிக்க கூடும் என்பதால் மத்திய அரசு மக்களை கவரும் திட்டங்களை வெளியிட ஆலோசனைகளை நடத்தி வரும் நிலையில் தமிழக அரசும் சில யோசனைகளை வைத்துள்ளது.
அதன்படி ரேஷன் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா என பரிசீலித்து வருகிறது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் கொண்ட பாமாயில் பாக்கெட் 6 கோடி லிட்டர் என கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
இந்த இலவச திட்டம் தீபாவளிக்கு கிடைக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை ரேஷனில் வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வேளை பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் என தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க அரசு முடிவு செய்தால் அவை இலவசமாக வழங்கப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications