POS கருவியுடன் மின்னணு தராசு இணைப்பு.. திணறும் ரேஷன் கடை ஊழியர்கள்.. பொதுமக்கள் பரிதவிப்பு
சென்னை: ஒரு நாள் முழுமையாக காத்திருந்து தான் ரேஷன் கடையில் உணவு பொருட்களை வாங்க வேண்டிய அளவிற்கு நிலைமை சிக்கலாகிவிட்டது. அந்த காலத்தில் ரேஷன் கடைக்கு போ என்றால், ஆளைவிட்டால்போதும் என்று ஓடுவார்கள். ஏனெனில் எப்போதுமே கூட்டமாகவே இருக்கும். வாங்கவே முடியாது. ஆனால் அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் வந்துவிட்டது. POS கருவியுடன் மின்னணு தராசு இணைந்துள்ளது. இணையதள வேகக்குறைவால் திணறி வரும் ரேஷன் கடை ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.. மக்களும் தவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பலருக்கு ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை முக்கியமான உணவு பொருளாகும். அதுதான் கோடிக்கணக்கான மக்களின் ஜீவாதாரமாக இருக்கிறது. ஆனால் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்தோ அல்லது ஒரு நாள் முழுக்க ஞாயிறுகளில் காத்திருந்தோ தான் வாங்கும் நிலை இருக்கிறது. முன்பைவிட இப்போது ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி செல்ல நீண்ட நேரம் ஆவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். என்ன பிரச்சனை என்பதை பார்ப்போம்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்) என்னும் மின்னணு கருவி மூலம் பொருட்கள் வினியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள், ஸ்மார்ட் கார்டுன் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் இந்த கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இந்த கைரேகை பதிவு 90 சதவீதம் ஒத்துப்போனால்தான் ரசீது போட முடியும் என்ற நிலையில் கைரேகை பதிவு செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆலோசித்து கைரேகை பதிவு 90 சதவீதம் ஒத்துப்போதல் என்பதை 70 சதவீதம் ஒத்துப்போனாலே ரசீது போடலாம் என்ற அளவிற்கு மாற்றார்கள்.. தற்போது கைரேகை பதிவு ஓரளவு எளிதாகி விட்டது,.
ஆனால் அதே நேரத்தில், தற்போது எடை போடும் கருவியும் 'புளூடூத்' அல்லது கேபிள் மூலம் 'பி.ஓ.எஸ்.' கருவியுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பொருளின் எடையும் துல்லியமாக இருந்தால் மட்டுமே ரசீது போட முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தால், பல மணி நேரம்வரை பொதுமக்கள் ரேஷன் கடையிலேயே காத்திருக்கும் நிலை இருக்கிறது. ஏனெனில் எடை எந்திரம் மற்றும் 'பி.ஓ.எஸ்.' கருவியை இணைப்பதற்கான இணையதள வேகம் குறைவாக இருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறதாம்.
பெரும்பாலான கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் செல்போனில் உள்ள 'டேட்டா'வை பயன்படுத்தி 'பி.ஓ.எஸ்.' கருவியை இயக்கி வருகிறார்கள். எனவே, தங்கள் 'பி.ஓ.எஸ். கருவிக்கான இணையதள வேகத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது தனி பிராட் பேண்டு இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
அதேநேரம் பி.ஓ.எஸ். கருவியானது 'சிம்' மூலம் இயங்குகிறது. சிம் மூலம் வழங்கப்படும் இணையதள சேவைக்கு தகுந்த கட்டமைப்பு பி.ஓ.எஸ். கருவி இருக்கவேண்டும். இணையதள சேவையை 5ஜி அளவிற்கு உயர்த்தி, அதற்கு தகுந்தாற் போன்ற உட்கட்டமைப்புகளை பி.ஓ.எஸ். கருவியிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications