நியாயவிலை கடைக்கு போறீங்களா? தமிழ்நாட்டில் இன்னைக்கு ரேஷன் கடைகளுக்கு லீவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொங்கல் பரிசு வழங்க கடைகள் விடுமுறையிலும் செயல்பட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் இன்று லீவு விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 39 மாவட்டங்களில் சுமார் 34,807 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் ரேஷன் கடைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றும் 2.2 கோடி குடும்பங்கள் ரேஷன் பொருட்களை நம்பிதான் இருக்கின்றன. அவர்களுக்கான அரசி, பருப்பு, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய், சர்க்கரை என அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையிலும், விலை இல்லாமலும் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படியாக மாநிலத்தில் வறுமை ஒழிப்பில் ரேஷன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் ரேஷன் கடைகளை தமிழ்நாடு அரசு மேம்படுத்தியிருந்தது. அதாவது கடந்த 40 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 1,666 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் இது குறித்து வெளியாகியிருந்த செய்தி குறிப்பில், "முதல்வரின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில், ரேஷன் கடைகள் இன்று செயல்படாது என கூறப்பட்டிக்கிறது. அதாவது கடந்த மாதம், பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க 2 லீவு நாட்களிலும் கடைகள் இயங்கின. எனவே, அதை ஈடு செய்யும் விதமாக ஜன.15ம் தேதியும், பிப்.22ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று 34807 ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ரேஷன் கடைக்கு போகும் திட்டம் இருந்தால் அதை மற்றொரு நாளுக்கு ஒத்தி வையுங்கள்.












Click it and Unblock the Notifications