ஜடேஜா மனசுல இருக்க பாரமே இறங்கிடுச்சு.. ராயுடு அவுட்டானதால் ஹேப்பி! இந்த தோனி பேன்ஸ் இருக்காங்களே
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ரசிகர்கள் மீது அந்த வீரர் ரவீந்திர ஜடேஜா அதிருப்தி அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், டெல்லிக்கு எதிரான போட்டியில் நடந்த சம்பவம் அவரை ஆறுதலடைய செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் இந்த தொடர் தொடங்கிய நிலையில் தற்போது 2 வது லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முதல் 4 இடங்களை பிடிக்க அணிகள் போராடி வருகின்றன. எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு போட்டி ரத்துடன் 15 புள்ளிகளை பெற்று 2 வது இடத்தில் இருக்கிறது. 16 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், 12 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 3 வது இடத்திலும், 11 புள்ளிகளுடன் லக்னோ அணி 4 வது இடத்திலும் உள்ளன.
10 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 வது இடத்திலும், 10 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 6 வது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு 7 வது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி 8 வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 9 வது இடத்திலும் 8 புள்ளிகளுடன் டெல்லி அணி 10 வது இடத்திலும் உள்ளன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி இருக்கும் அனைத்து போட்டிகளையுமே தோனிக்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளை உள்ளூர் ரசிகர்கள் திரண்டு சென்று பார்த்து வருகிறார்கள்.
அதேபோல் பிற மாநிலங்களில் சென்னை விளையாடும் மைதானங்களுக்கும் தோனி ரசிகர்கள் மஞ்சள் சீருடையுடன் குவிந்துவிடுவதால், சென்னை மைதானங்களை போன்றே அந்த மைதானங்கள் காட்சி தருகின்றன. தோனியின் ஒவ்வொரு சிக்சர்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதனால் மைதானங்களில் உற்சாகம் நிலவினாலும், தோனி பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காக, சென்னை வீரர் ஜடேஜா ஆட்டமிழப்பதையே ரசிகர்கள் சத்தம்போட்டு கொண்டாடி வந்தனர். பல போட்டிகளில் இதுவே தொடர்கதையாகிவிட, ரசிகர்களின் செயல் ஜடேஜா மனதை காயப்படுத்தியதாக தகவல் வெளியானது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் இதனை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். "தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக பேட்டிங் செய்துகொண்டு இருக்கும் வீரர்கள் ஆட்டமிழக்க வேண்டும் என வேண்டுகிறார்கள். இது என்ன மாதிரியான ஆதரவு?" என தங்களிடம் ஜடேஜா சொன்னதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், ஜடேஜாவும் ராயுடுவும் பேட்டிங் செய்துகொண்டு இருந்தனர். இதில் சென்னை அணி வழக்கத்தைவிட குறைவான ரன்களையே எடுத்து இருந்தது. ஆனால், சென்னை ரசிகர்கள் கவலையெல்லாம், யாரவது ஒருவர் ஆட்டமிழந்து தோனி பேட்டிங் செய்ய வரவேண்டும் என்பதுதான்.
அவர்களின் வேண்டுதலின் படியே நடந்தது. ஆனால், இம்முறை ஜடேஜாவை ராயுடு முந்திக்கொண்டார். கலீல் அஹமது ஓவரில் ராயுடு 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சென்னை ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் தோனி பெவிலியனில் இருந்து மைதானம் நோக்கி வரும்போது கரகோஷங்கள் உச்சம் தொட்டன. எப்போதும் தான் அனுபவிக்கும் வலியை இம்முறை ராயுடு அனுபவத்ததை ஜடேஜா பார்த்த ஜடேஜா தோனியுடன் பல போட்டிகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்து விளையாடினார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications