பாக்யராஜ் மாதிரி விஜய்க்கு ரிட்டர்ன் அரசியல்தான்.. ஜானகியுடன் சிவாஜி சென்ற அரசியல்.. பிரபலம் கருத்து
சென்னை: வரப்போகும் தேர்தலையும் விஜய் சந்திக்க முடியாது, அப்படியே சந்தித்தாலும் நஷ்டத்தைதான் தவெக சந்திக்க வேண்டியிருக்கும்.. தவெகவில் தலை மட்டுமே உள்ளது, மற்றபடி உடம்பு, கை, கால் எதுவுமே இல்லை. வெறும் தலையை மட்டுமே வைத்து கொண்டு, எப்படி தேர்தலை சந்திக்க முடியும்?அந்த தலையும் நேர்திசையில் இல்லாமல், குழப்பமாக உள்ளது என்கிறார் விமர்சகர் ரவீந்திரன்.
Aadhan Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, சிவாஜி, ரஜினிகாந்த், பாக்யராஜ் வரிசையில், ரிட்டன் அரசியல்தான் விஜய்க்கு அமையும்.. ஜனநாயகன் படம் ரிலீஸானதுமே, அரசியலிலிருந்து திரும்பி செல்வதற்கான வாய்ப்பு விஜய்க்கு பிரகாசமாக உள்ளது.

ஒரு தேர்தலையும் சந்திக்க விஜய் சந்திக்க முடியாது, அப்படியே சந்தித்தாலும் நஷ்டத்தைதான் அவர் சந்திக்க வேண்டியிருக்கும்.. தவெகவில் தலை மட்டுமே உள்ளது, மற்றபடி உடம்பு, கை, கால் எதுவுமே இல்லை. வெறும் தலையை மட்டுமே வைத்து கொண்டு, எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? அந்த தலையும் நேர்திசையில் இல்லாமல், குழப்பமாக உள்ளது.
விஜய் செய்ய வேண்டியது என்ன
வரும் தேர்தலை சந்திக்க வேண்டுமானால், முதலில் விஜய்க்கு ஒரு உறுதியான நிலைப்பாடு வேண்டும். அப்படி தனித்து போட்டி போடுவதற்கு விஜய், தன்னுடைய கொள்கைகளையும், பிரச்சனைகளையும் எடுத்து முன் வைக்க வேண்டும்.
பிறகு செய்தியாளர்களை சந்திக்க தயாராக வேண்டும். அது தொடர்பாக பொதுக்கூட்டத்துக்கு தயாராக வேண்டும். இப்போதைக்கு 234 தொகுதிகளிலும் தனித்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கே இல்லை..
அடுத்தக்கட்டமாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், விஜயலட்சுமி, தாஹீரா, ஆடிட்டர் வெங்கட்ரமணன் போன்றோர் விஜய்க்கு அடுத்தக்கட்டமாக உள்ளனர்.. இவர்களில் யாருக்குமே தனித்து போட்டியிட்டு, 31-ல் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணமும் வரவில்லை..
அடுத்தக்கட்டமாக, மாவட்ட அளவிலான தலைவர்களுக்கும் தனித்து நின்று போட்டியிட விருப்பமில்லை.. இதற்கு அடுத்தக்கட்டமாக, தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற விருப்பம் உள்ளதால், அதிமுக கூட்டத்தில் கொடிகளை அசைத்து கொண்டிருக்கிறார்கள்.
சார் விவகாரத்தில் தவெக நிலைப்பாடு?
தற்போது வாக்காளர் சார் விவகாரத்தில் திமுகவும், கூட்டணி கட்சிகளும் கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு எதிராக சொல்லி வருகின்றன.. சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் அதை பற்றி இன்னமும் பேசவேயில்லை.
ஒரு அரசியல் கட்சியானது, ஒரு நிலைப்பாட்டை எடுத்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் இந்நேரம் சார் பற்றி பேசியிருப்பார்கள்.. ஆனால் தவெக தரப்பில் அமைதியாகவே இருப்பதால் பாஜகவுடன் கூட்டணியோ? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவருமே இதை உற்று கவனிக்கவே செய்கிறார்கள்.
ஜானகி - சிவாஜி அரசியல்
திருச்சியில் பாஜகவை எதிர்த்து பேசியதைகூட, இப்போது பேசாமல் உள்ளார் என்றால், அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதாகவே அர்த்தம்.. ஒருவேளை பாஜக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்தால் அவரது அரசியல் காலியாகும்.. வி.என்.ஜானகியுடன் சிவாஜி சென்ற நிலைமையை போலாகிவிடும்.
அப்படி விஜய் பாஜகவுடன் சென்றால் அவரது அரசியல் காலியாகும்.. சினிமா காலியாகும்.. இமேஜ் காலியாகும். 47 தொகுதிகளிலும் நான்கைந்து சதவீத வாக்குகளே உள்ளன நிலையில், வெறும் 3 தொகுதிகளில் உள்ள 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் உள்ளன.. இங்கேயும் சிக்கல் வந்துவிடும். பாக்யராஜ் மாதிரி அசிங்கப்பட்டு போகாமல், முதலிலேயே விலகி கொள்ளலாம்" என்றெல்லாம் கருத்து கூறியிருக்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications