ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்!
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு (MPC) ஜூன் மாதக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தொடர்ந்து 5.25 சதவீதமாகவே ரெப்போ விகிதம் நீடிக்கும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை வலியுறுத்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா 2 நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்ட போது, "உலகளாவிய ரீதியில் மிக முக்கிய வர்த்தகப் பாதைகளிலும், விநியோகச் சங்கிலியிலும் (Supply Chains) தற்போது பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகப் சர்வதேசச் சந்தைகளில் அதீத ஏற்ற இறக்கங்களும், ஒருவித எச்சரிக்கை உணர்வும் நிலவி வருகிறது.
இருப்பினும், இத்தகைய சர்வதேசப் பொருளாதார பாதிப்புகளின் தாக்கத்தை மிகவும் குறைந்த அளவில் எதிர்கொண்டு இந்தியா திறம்பட இயங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.
மேலும், இத்தகைய சவால்களை வெறும் அச்சுறுத்தலாகப் பார்க்காமல், இந்தியப் பொருளாதாரத்தின் மீள்தன்மையை (Resilience) மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு நல்வாய்ப்பாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்குப் போர் உருவாக்கிய நெருக்கடி
இந்த ஜூன் மாத ரிசர்வ் வங்கி நாணய கொள்கைக் குழுவின் கூட்டம், ஒரு இக்கட்டான சூழலில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு ஆசியாவில் (West Asia) நீடித்து வரும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் பல அடுக்குகளில் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்த சர்வதேசப் போரின் விளைவாக, பல்வேறு உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனங்களும், பொருளாதார நிபுணர்களும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறித்த தங்களின் கணிப்புகளைக் குறைத்து வருகின்றனர்.
அதேநேரம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் சில்லறை பணவீக்கம் (Inflation) மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications