இதுதான் ஒரே வழி.. ரூ.2000 நோட்டுகள் கைக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எப்படி மாற்றுவது?
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் உங்களின் கைகளுக்கு வரும் பட்சத்தில் அதை என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதுவரை புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் புதிய 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் சந்தையில் புழக்கத்திற்கு வந்தன. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி 2023 மே 19 அன்று முடிவு செய்தது. நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. அதிக அளவில் பணம் கொண்டு வருபவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 98 சதவீதம் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், 6000 கோடி ரூபாய்க்கு அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாய் 3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. திரும்பப் பெறும் அறிவிப்பை அடுத்து, அதிக அளவில் பணம் திரும்ப வந்தது. 2025 மே 31 ஆம் தேதி நிலவரப்படி, ரூபாய் 6181 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வர வேண்டியுள்ளது. அதாவது, இன்னும் 6181 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் சந்தையில் உள்ளன. இவற்றை திரும்பக் கொடுத்து பணமாக மாற்ற முடியும்.
2000 ரூபாய் நோட்டுகளின் தற்போதைய நிலை
2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படவில்லை. அவை சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. எனினும், அவற்றை வைத்து சந்தையில் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது. வங்கிகளில் கொடுத்து மாற்றுவது மட்டுமே ஒரே வழி. 2023 அக்டோபர் 7 வரை அனைத்து வங்கிகளிலும் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடிந்தது. அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டுமே நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.
2000 ரூபாய் நோட்டுகளுக்கு இன்னும் சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதியளிக்கப்பட்ட 19 அலுவலகங்கள் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி வழங்குகிறது. 2023 அக்டோபர் 9 முதல் இந்த அலுவலகங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றன. தனிநபர்களும், நிறுவனங்களும் இந்த அலுவலகங்களில் பணம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது சாதாரண வங்கிகளிலும், கடைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகள் அனுமதிக்கப்படுவது இல்லை. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 19 அலுவலகங்களுக்கு அனுப்புவது மட்டுமே தீர்வாக உள்ளது.
ரிசர்வ் வங்கி அலுவலகங்கள்
ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 19 அலுவலகங்களில் தமிழ்நாட்டில் சென்னையில் ஒன்று மட்டுமே உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, பெலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா ஆகிய இடங்களில் மற்ற அலுவலகங்கள் உள்ளன.
நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கையாகும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதோடு, அவற்றைக் கொடுத்து மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications