தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் 13 வாக்குசாவடிகளில் வரும் 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 திருவள்ளூர், கடலூர், ஈரோடு லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 19ஆம் தேதி, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. அன்றைய தினமே இந்த 13 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று சத்யபிரதா சாஹு இன்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மொத்தம், 46 வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சந்தேகிப்பதாக இன்று காலை சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார். இதையடுத்து அங்கெல்லாம் மறு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், எதிர்க்கட்சிகள் யாருமே கோரிக்கை விடுக்காமல், தேர்தல் ஆணையம் இவ்வாறு ஒரு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது சந்தேகத்திற்கிடமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். தேர்தல் அதிகாரியை மாற்ற அவர் கோரிக்கைவிடுத்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சத்யபிரதா சாஹு, மிகவும் தடுமாற்றம் காட்டுவதால், சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்த நிலையில் 13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications