ரியலி ரியல் எஸ்டேட் ஜாக்பாட்! சென்னை திருமழிசையில் நடக்கும் இந்த மேஜிக்.. 5 வருடத்தில் 1 கோடி லாபமா?
சென்னை: சென்னை நிலம் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், திருமழிசை பகுதியில் நிலத்தின் விலை அமைதியாக உயர்ந்து வருகிறது.. சென்னை புறநகர் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையில் கிடைத்த நிலங்கள் இன்று பல மடங்கு உயர்ந்துள்ளன என்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. குறிப்பாக திருமழிசை நிலம் விலை எதிர்காலத்தில் அதிக லாபம் தருமா என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது..
சென்னை என்றாலே பலருக்கும் ஜி.எஸ்.டி சாலையும், ஓ.எம்.ஆர் சாலையும்தான் சட்டென நினைவுக்கு வரும். ஆனால், காலமாற்றத்தில் அந்த பகுதிகளில் நிலம் வாங்குவது என்பது நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாத கனவாகிவிட்டது.

சென்னை நிலம் மதிப்பு
சென்ட் கணக்கிலேயே லட்சங்களைத் தாண்டி கோடிகளில் விலை பேசப்படுவதால், சாமானிய மக்கள் தங்கள் சேமிப்பை எங்கே முதலீடு செய்வது என்று திகைத்துப் போயுள்ளனர். இந்தச் சூழலில் தான், பலரது பார்வையும் படாத, ஆனால் மிக வேகமாக வளர்ந்து வரும் திருமழிசை பகுதி இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னையின் மேற்கு வாசலாகக் கருதப்படும் இந்த பகுதி, அடுத்த சில வருஷத்தில் ஒரு புதிய நகரமாகவே உருவெடுக்கப் போகிறது என்பதுதான் தற்போதைய கள நிலவரம்.
திருமழிசையின் இந்த அதிரடி வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் தமிழக அரசின் மெகா திட்டம் தான். சென்னையின் நெரிசலைக் குறைக்க, திருமழிசையை ஒரு மிகப்பெரிய செயற்கைக்கோள் நகரமாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பல நூறு ஏக்கர் நிலங்கள்
இதற்காக பல நூறு ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள், அகலமான சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைய உள்ளன. ஒரு பகுதி அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில் வளரும்போது, அங்கு அடிப்படை வசதிகள் மிகக் குறுகிய காலத்தில் மேம்படும். இதுவே முதலீட்டாளர்களை இந்தப் பக்கம் தலைவைக்கத் தூண்டுகிறது.
அதுமட்டுமல்ல, போக்குவரத்து வசதிதான் ஒரு இடத்தின் மதிப்பைத் தீர்மானிக்கும். அந்த வகையில் திருமழிசைக்கு மிகப்பெரிய பலம் மெட்ரோ ரயில் திட்டம்.
இப்போது பூந்தமல்லி வரை மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக இது திருமழிசை வழியாகப் பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு இடத்திற்கு மெட்ரோ ரயில் வந்துவிட்டால், அதன் நில மதிப்பு பல மடங்கு உயரும் என்பதற்குச் சென்னை நகரின் மற்ற பகுதிகளே சாட்சி.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
அத்துடன், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பகுதி அமைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசலின்றிப் பயணிப்பதற்கான வாய்ப்புகளும் இங்கே அதிகம்.
இன்று பலரும் ஊரப்பாக்கம், வண்டலூர், ஒரகடம் போன்ற இடங்களில் நிலம் வாங்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படுவதுண்டு. அந்தப் பகுதிகள் வைரலாவதற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதே நிலையில் தான் இன்று திருமழிசை இருக்கிறது. இன்னும் 5 முதல் 10 வருஷத்தில் இந்தப் பகுதி சென்னையின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாறும் என்று ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
சிறிய சேமிப்பு - முதலீடு லாபம்
குறிப்பாக, நடுத்தர மக்கள் தங்களின் ஒரு சிறிய சேமிப்பைக் கொண்டு இன்று இங்கு முதலீடு செய்தால், அது எதிர்காலத்தில் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கோ அல்லது கல்யாணத்துக்கோ ஒரு பெரிய சொத்தாக மாறும் என்றே தெரிகிறது..
இருந்தாலும், நிலம் வாங்குவதில் எப்போதும் கூடுதல் கவனம் தேவை. திருமழிசை பகுதியில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சிஎம்டிஏ அங்கீகாரம் பெற்ற இடங்களைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது.
அதேபோல ஆவணங்களை சரியாக சரிபார்த்து, அரசின் எதிர்காலத் திட்டங்கள் எந்தெந்தப் பகுதிகளில் வரப்போகின்றன என்பதை அறிந்தும் செயல்படுவது நல்லது. மேலும், திருமழிசை இன்று ஒரு புதைந்து கிடக்கும் தங்கச் சுரங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். முறையான திட்டமிடலோடு இங்கே நிலம் வாங்குவது, ஒரு சாமானிய மனிதனை எதிர்காலத்தில் செல்வந்தராக மாற்றும் ஒரு வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்...!!












Click it and Unblock the Notifications