Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரவாயலில் ரியல் "வில்லன்'? சென்னையில் யூடியூப் பார்த்து மனைவியிடம் கணவன் காட்டிய விபரீத வித்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் என்ற அழகான உணர்வு, வன்மமாக மாறினால் எவ்வளவு விபரீதங்களை விளைவிக்கும் என்பதற்கு சாட்சியாக சென்னை மதுரவாயலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.. மொத்த பேரும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டாலும், யாரிந்த இளைஞன்? என்ற அதிர்ச்சி கேள்வி மதுரவாயலில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சக்திவேல்.. இவர் வர்ஷா என்ற பெண்ணை விரட்டி விரட்டி காதலித்தார்.. பிறகு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.. 3 வருடங்களுக்கு முன்பு ஊரே ஆச்சரியப்படும்படியாக இவர்களது காதல் வாழ்க்கை ஆரம்பமானது.. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது..

Chennai Maduravoyal Real-life Villain

மதுரவாயல் சென்னை

ஆனால் திருமணமாகி சில மாதங்களிலேயே சந்தேகம் எனும் தீ இவர்களது வாழ்க்கையில் ஊடுருவிவிட்டது.. தினம் தினம் சண்டை, தகராறு என குடும்பத்தில் நிம்மதி குலைந்தது.. இதனால் மனம் உடைந்து போன வர்ஷா, குழந்தையோடு தன்னுடைய அம்மாவுக்கே கிளம்பி போய்விட்டார்..

காதல் கணவன் ஒருநாள் மனம் மாறி திரும்பி வந்து தன்னை அழைத்து செல்வான் என்றும் காத்து கிடந்தார் வர்ஷா.. ஆனால் 10 மாதங்கள் ஆகியும் சக்திவேல் வர்ஷாவை அழைக்க செல்லவில்லை.. சமாதானமும் செய்யவில்லை..

ரியல் வில்லன்

மாறாக, 10 மாத பிரிவு சக்திவேலுக்கு ஆத்திரத்தையே ஊட்டியது,. கடந்த மே மாதம் வர்ஷாவை சந்திக்க சென்ற சக்திவேல், மீண்டும் தகராறு செய்து, வர்ஷாவை தாக்கினார்.. அவரை கத்தியால் வெட்டியுள்ளார்... இது போலீஸ் கேஸாகிவிட்டது.. மனைவியை கத்தியால் வெட்டிய வழக்கில் ஜெயிலுக்கு சென்றார் சக்திவேல்..

ஜாமீனில் வெளிவரும்போது எப்படியும் மனம்திருந்தி வருவார் என்று வர்ஷா காத்திருந்தார்.. ஆனால், சிறையிலிருந்து வெளிவந்ததும் வன்மத்துடன் செயல்பட்டுள்ளார் சக்திவேல்..

நேற்று முன்தினம் நள்ளிரவு தன்னுடைய நண்பன் சதீஷுடன் பைக்கில் மதுரவாயல் வந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை வர்ஷாவின் வீட்டின் மீது சரமாரியாக வீசினான். பெரும் சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததில் அந்த இடமே புகைமண்டலமாக மாறியது.

நாட்டு வெடிகுண்டு

வாசலில் நின்றிருந்த வர்ஷாவின் சித்தப்பா ரமேஷ் மற்றும் அவரது மனைவி புகை மண்டலத்திற்கு நடுவே மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.. இந்த சத்தத்தை அக்கம்பக்கத்தினர் பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.. ஆனால், அவர்களை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்..

இது குறித்து வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த சக்திவேலையும் அவனது நண்பன் சதீஷையும் அதிரடியாக கைது செய்தனர்... காதலித்து கைப்பிடித்த மனைவியையே வெடிகுண்டு வீசிக் கொல்ல முயன்ற கணவனின் இந்த வெறித்தனமான செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் போலீசார் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்ததுடன், கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த சக்திவேலையும் அவனது நண்பனையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சக்திவேலுக்கு எப்படி நாட்டு வெடிகுண்டு கிடைத்தது என்பதையும் விசாரித்தனர்..

யூடியூப் - கணவன்

அப்போதுதான் பல பகீர் தகவல்கள் வெளியாகின.. அதாவது ஜெயிலில் இருக்கும்போதே மனைவியை கொன்றுவிடுவது என்று முடிவெடுத்தாராம் சக்திவேல்.. அதனால்தான் ஜாமீனில் வெளிவந்ததும் அதாவது 4 நாட்களுக்கு முன்பு வர்ஷாவை சந்தித்து தகராறு செய்துள்ளார்.. அத்துடன் மீண்டும் வர்ஷாவின் கையை கத்தியால் வெட்டியிருக்கிறார்..

எனினும் சிறு காயம் என்பதால், வர்ஷா அதனை பெரிதுபடுத்தவில்லை.. போலீசுக்கும் போகவில்லை.. கத்தியால் வெட்டியும் மனைவிக்கு பயம் வரவில்லையே என்று நினைத்த சக்திவேல், டெக்னாலஜியை பயன்படுத்தி மனைவியை கொல்ல அடுத்த திட்டம் போட்டார்..

உன் கதை முடிய போகுது

அதன்படி நாட்டு வெடிகுண்டு வைத்து மனைவியை கொல்ல திட்டமிட்டார்.. இதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து தன்னுடைய வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, தான் தயாரித்த குண்டுகளை போட்டோக்களாக எடுத்து, அதை வர்ஷாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி,
"உன் கதை முடியப்போகிறது" என்று தொடர்ச்சியாக மரண பயத்தை காட்டி வந்துள்ளார்..

நேற்று முன்தினம், தான் தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு கொண்டு, மனைவி வீட்டை நோக்கி சென்றிருக்கிறார். வீட்டு வாசலில் வர்ஷாவின் சித்தப்பா ரமேஷ், சாப்பிட்டுவிட்டு அப்போது தான் பல் குத்திக் கொண்டே வாசலில் வந்து நின்றாராம்.. உடனே பையில் உள்ள குண்டுகளை தூக்கி வீட்டின் மீது வீசியிருப்பதும் அம்பலமாகி உள்ளது..!

தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கும் சக்திவேலின் வெறித்தனமான செயல், மதுரவாயல் பகுதி மக்களை இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவிடவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+