காரணமே வேற.. ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டது ஏன்? முந்தைய விபத்துகளுக்கும் இதற்கும் உள்ள ஷாக் கனெக்சன்
சென்னை: சென்னை நோக்கி கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்து இருக்கும் நிலையில் இந்த ரயில் விபத்து மட்டுமின்றி அனைத்து முக்கிய ரயில் விபத்துகளுக்குமான முக்கிய காரணம் ஒன்றுதான். அது என்னவென்று பார்ப்போம்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசேர் அருகே விபத்துக்குள்ளானது சரக்கு ரயில் மற்றும் டெல்லி துரந்தோ ரயிலுடன் இந்த ரயில் மோதியதில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஐ தாண்டிவிட்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விபத்துக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. விபத்து தொடர்பாக விரைவில் விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் இந்தியாவில் நிகழும் பெரும்பாலான ரயில் விபத்துகளுக்கான முக்கிய காரணமாக ஒன்றைதான் பெரும்பாலானோர் கூறுகிறார்கள்.
அதுதான் இந்திய ரயில்வேயில் ஊழியர்கள் பற்றாகுறை. ஆம் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அளித்த தகவலில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி அனைத்து மண்டலங்களையும் சேர்த்து 2.98 லட்சம் காலி பணியிடங்கள் இந்திய ரயில்வேயில் நிரப்பப்படாமல் இருந்துள்ளன.
இதில் அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில் 38,967 காலி பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சமாக மெட்ரோவில் 1,067 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மத்திய ரயில்வேயில் 28,606 காலி பணியிடங்கள், கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 8,278 காலி பணியிடங்கள், மத்திய கிழக்கு ரயில்வேயில் 14,439 காலி பணியிடங்கள் இருக்கின்றன.
கிழக்கு ரயில்வேயில் 30,327 காலி பணியிடங்கள், மத்திய வடக்கு ரயில்வேயில் 18,383 காலி பணியிடங்கள், வடகிழக்கு ரயில்வேயில் 14,118 காலி பணியிடங்கள், வடகிழக்கு எல்லை ரயில்வேயில் 15,705 காலி பணியிடங்கள், வட மேற்கு ரயில்வேயில் 15,207 காலி பணியிடங்கள், மத்திய தெற்கு ரயில்வேயில் 16,947 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மத்திய தென்கிழக்கு ரயில்வேயில் 8,025 காலி பணியிடங்கள், தென் கிழக்கு ரயில்வேயில் 17,661 காலி பணியிடங்கள், தெற்கு ரயில்வேயில் 22,357 காலி பணியிடங்கள், தென் மேற்கு ரயில்வேயில் 6,581 காலி பணியிடங்கள், மத்திய மேற்கு ரயில்வேயில் 11,636 காலி பணியிடங்கள், மேற்கு ரயில்வேயில் 30,667 காலி பணியிடங்கள் இருக்கின்றன.
உலகிலேயே மிக நீளமான ரயில் பாதையை கொண்ட ரயில்வேயாக இந்திய ரயில்வே திகழ்ந்து வருகிறது. ஒரே நிர்வாகத்துக்கு கீழ் செயல்படும் உலகின் மிகப்பெரிய ரயில்வே என்ற பெருமையை பெற்றது இந்தியன் ரயில்வே. சுமார் 64 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதையை கொண்ட இதில் சுமார் 3 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலே வைத்து இருப்பது இதுபோன்ற விபத்து ஏற்படும் சமயங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாக வந்து நிற்கிறது.












Click it and Unblock the Notifications