அரசு டாஸ்மாக்கில் ரிக்கார்டு பிரேக்! தீபாவளிக்கு தமிழகத்தில் ரூ.790 கோடி மது விற்பனை! செம சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானங்கள் சுமார் ரூ.600 கோடிக்கு விற்பனைக்கு அனைத்து கடைகளிலும் முன்கூட்டியே குவிக்கப்பட்டுவிட்டன.. இந்த வருடம் தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மதுவிற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. ஆனால், 18,19,20 ஆகிய 3 நாட்களில் மட்டும், மதுவிற்பனை வருமானம் வெளியாகியிருக்கிறது.. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மதுவிற்பனையில் சர்ப்ரைஸ் தந்துள்ளன.
தீபாவளி பண்டிகை நமக்கு திங்கட்கிழமை வந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகிவிட்டது.. அந்தவகையில், 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் மூழ்கி உள்ளனர்.. இதனால் மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்..

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை அதிகரித்துவிடுவது இயல்பாகும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக்
அந்தவகையில், இந்த தீபாவளி பண்டிகைக்கும் மது விற்பனை அதிகமாகும் என்பதால், அதுதொடர்பாக ஊழியர்களுக்கு, பல்வேறு அறிவுரைகளை டாஸ்மாக் நிறுவனம் முன்கூட்டியே வழங்கியிருந்தது. .
குறிப்பாக, தமிழகம் முழுவதுமுள்ள 4829 மதுக்கடைகளில் 15 நாட்களுக்கு இருப்பு வைக்க வேண்டும், எந்த சரக்கும் இல்லை என்று சொல்லாமல் மதுபானஙகளை வழங்க வேண்டும், சாதாரண ரக மது வகைகள் அதிகளவில் வைத்திருக்க வேண்டும். பிராந்தி, விஸ்கி, பீர், ரம் ரகங்கள் ரூ.140 குறைந்த விலை சரக்கு அதிகளவில் இருப்பு இருக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தியது.
மேலும், இன்று அதாவது 21-ந்தேதி வரை மதுபானங்கள் சுமார் ரூ.600 கோடிக்கு விற்பனைக்கு அனைத்து கடைகளிலும் முன்கூட்டியே குவிக்கப்பட்டுவிட்டது.
இலக்கை தாண்டியது மது விற்பனை
வழக்கமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சாதாரணமாக ஒரு நாளைக்கு ரூ.120 ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. இதுவே சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக விற்பனை அதிகரிக்கும்.. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயர்ந்துவிடும்.. அதாவது 180 கோடிக்கு மதுவிற்பனை நடப்பது வழக்கமாகும்.
கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடியாக இருந்ததால், இந்த வருடம் அதைவிட அதிகமாக அதாவது ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எகிறி அடித்த சென்னை
ஆனால் விஷயம் என்னவென்றால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும் விற்பனை நடந்துள்ளது. தீபாவளி பண்டிகையான நேற்று (ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
மண்டலம் வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியே 25 லட்சத்திற்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடியே 31 லட்சத்திற்கும், சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடியே 34 லட்சத்திற்கும், மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
சர்ப்ரைஸ் தந்த பெரம்பலூர், அரியலூர்
இதில், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் சுமார் 90 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.. தீபாவளியை முன்னிட்டு இந்த இரு மாவட்டத்திலும்,
மதுவிற்பனை வழக்கத்தைவிட டபுள் மடங்காகிவிட்டது. 5 கோடியே 6.3 லட்சத்துக்கு மது விற்பனை அதாவது 50629900க்கு விற்பனையாகி உள்ளது..
அதுமட்டுமல்ல, இன்றும் நாளையும் கூட விடுமுறை என்பதால், மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications