ரேஷனில் நடந்த அதிரடி.. ஒரு மாசம் கூட ஆகல.. மக்களுக்கு போன மகிழ்ச்சி செய்தி.. இப்படித்தான் இருக்கணும்
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இந்த தக்காளி விற்பனையில் தமிழ்நாடு அரசு புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளது.
நாடு முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் 30 ரூபாய்க்கு கிலோ தக்காளி விற்றது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தாண்டி வடஇந்தியாவில் விற்பனை ஆகிறது.

தமிழ்நாட்டில் தக்காளி விலை 150 ரூபாயை கடந்த மாதம் எட்டியது. தற்போது தமிழ்நாட்டில் தக்காளி விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 100 ஐ தாண்டி விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது. இன்று தக்காளி 100 ரூபாய்க்கு விற்றது. இந்த வாரம் தக்காளி விலை குறைந்து மீண்டும் பழைய நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அடிப்படை பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கொள்முதல் விலையில் அமுதம் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தக்காளி விற்பனை 200 ரேஷன் கடைகளுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது தக்காளி விற்பனை இன்று முதல் 500 ரேஷன் கடைகளுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை கொள்முதல் விலையான 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 100 ரேஷன் கார்டுக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கார்டுக்கு தினமும் ஒரு கிலோ மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரேஷன் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
சாதனை: இந்த நிலையில்தான் இந்த தக்காளி விற்பனையில் தமிழ்நாடு அரசு புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தக்காளியை கிலோ ₹60க்கு வழங்க மாநில அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, நியாய விலைக் கடைகள் மற்றும் அரசு விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 450 டன் தக்காளி விற்பனையாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு நேரடியாக தக்காளி விற்பனையில் செய்த மிகப்பெரிய சாதனை ஆகும் இது. ஜூலை 4ஆம் தேதி சென்னையில் 82 கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்குள் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. தக்காளி விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி ரேஷன் கடைகளில் விற்பனை தொடங்கியது.
தற்போது விலை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டதுடன், தக்காளியும் மக்களுக்கு சரியாக கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
கூட்டம் அதிகரிப்பு: ரேஷன் கடைகளில் இதனால் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. இன்று ரேஷன் கடைகளில் 100 மீட்டர் வரை பல இடங்களில் கூட்டம் இருந்தது. இதனால் ரேஷன் கடைகளில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் திணற தொடங்கி உள்ளனர். : தக்காளி விலை உயர்வை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை களைகட்டி உள்ளது












Click it and Unblock the Notifications