சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்க.. அடக்கி வாசிங்க! கோபப்பட்ட டெல்லி பாஜக! தமிழக தலைகளுக்கு ரெட் கார்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததும் பாஜக தலைவர்கள் அதிமுகவை தாக்கி பேசுவார்கள்.. அதிமுக தலைவர்களின் ஊழல் பற்றியெல்லாம் பேசுவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. லேசான கோபத்தை தவிர பாஜக தலைவர்கள் யாரும் அதிமுகவை விமர்சனம் செய்து பேசவில்லை.. பாஜக தலைவர்களின் இந்த செயலுக்கு பின் முக்கியமான காரணம் உள்ளதாம்.. முக்கியமாக டெல்லி போட்ட முக்கியமான ஒரு ஆர்டர்தான் இதற்கு பின்னணியில் இருக்கிறதாம்!

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணி முறிவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது ஜெயலலிதாவின் ஊழல் பற்றி பேசியது, திமுக பைல்ஸ் விவகாரத்தில் அதிமுக பைல்ஸ் பற்றியும் வெளியிடுவேன் என்று கூறியது.

Red card for Tamil Nadu BJP leaders to talk against AIADMK and Edappadi Palanisamy after from Delhi leaders

நானும் ஜெயலலிதா போல ஒரு தலைவர்தான் என்று கூறியது. அதோடு நிற்காமல், அண்ணா - தேவர் பற்றி தேவையில்லாத மோதலை ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற சில விஷயங்களை கூறியது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது எல்லாம் இரண்டு தரப்பின் மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கள்தான் அதிமுக - பாஜக உறவு முறிய காரணமாக அமைந்தது. அதிமுக பாஜக மோதலை முடிவிற்கு கொண்டு வர அதிமுக தலைவர்களும் கூட தீவிரமாக முயன்றனர். டெல்லியில் இதற்காக சமாதான தூதுகளை கூட மேற்கொண்டனர். ஆனால் எதுவும் வெற்றிபெறவில்லை.

கூட்டணி மோதல் : அதோடு அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று கூட இவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது எதுவும் பாஜகவின் செவிகளுக்கு கேட்கவில்லை. விளைவு அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிப்பதாக அறிவித்தது. இந்த கூட்டணி முறிந்த பின் அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர். அதோடு இல்லாமல், அதிமுகவினர் சிலர் பாஜகவை விமர்சனம் செய்தனர். ஆனால் அதிமுகவின் பாஜகவினரை மோசமாக பேச கூடாது, கடுமையாக விமர்சனம் செய்ய கூடாது என்றும் அதிமுக தரப்பு உத்தரவிட்டது.

இன்னொரு பக்கம் : அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததும் பாஜக தலைவர்கள் அதிமுகவை தாக்கி பேசுவார்கள்.. அதிமுக தலைவர்களின் ஊழல் பற்றியெல்லாம் பேசுவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக சில மூத்த தலைவர்கள் அப்படி பேசுவார்கள். அதிமுகவை நேரடியாக அவர்கள் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. முக்கியமாக அண்ணாமலை இதில் கப்சிப் என்று இருக்கிறார்.

கூட்டணி பற்றி கேட்டால் டெல்லி தலைமை முடிவு எடுக்கும் என்கிறார். அதேபோல் அதிமுக பற்றி கேட்டாலும் டெல்லி முடிவு எடுக்கும் என்கிறார். ஒரு காலத்தில் டெல்லி மேலிடம் கூட்டணியை தொடர்ந்தாலும் நான் கூட்டணியில் இருக்க மாட்டேன் என்று கூறியவர் அண்ணாமலை. அவரே இப்போது பாஜக மேலிடம் இதில் முடிவு எடுக்கும் என்று ஒதுங்கிக்கொண்டு உள்ளார். அவர் இந்த பேச்சு மட்டுமல்ல பல பாஜக தலைவர்கள் அதிமுக பற்றி பேசாமல் அடக்கி வாசித்து வருகிறார்களாம்.

இதற்கெல்லாம் பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளதாம். அதன்படி டெல்லி பாஜக தரப்பு.. நாங்கள் அதிமுகவுடன் பேசி சமாதானம் செய்கிறோம். நீங்கள் அதுவரை அடக்கி வாசியுங்கள். குட்டையை குழப்ப வேண்டாம். தேவையின்றி அதிமுகவை சீண்ட வேண்டாம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் என்டிஏவிற்கு அதிமுக முக்கியம். அதிமுக பிளவை என்டிஏ பிளவாக வடக்கு பார்க்கிறது. அதற்கு அனுமதிக்க முடியாது. அதனால் அதிமுகவை சீண்டுவதை நிறுத்துங்கள்.. தமிழக பாஜக தலைவர்களுக்கு பேசுவதற்கான ரெட் கார்டு போடப்பட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+