லைசென்ஸ் எடுக்க லீவ் போடுறீங்களா? சென்னையில் ஆர்டிஓ அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும்
சென்னை: சென்னையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுவாக அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும். இவை போக முக்கிய பண்டிகை நாட்களிலும் விடுமுறை விடப்படும். இயற்கை சீற்றம், பண்டிகை கால நெருக்கடிகளில் கூடுதல் விடுமுறையை அரசு அறிவிக்கும்.

அப்போது வரும் வாரத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக இயங்கும் என்றும் அறிவிக்கப்படும். இந்த நிலையில் சில அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்குகின்றன. இந்த நிலையில் இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களை இயக்குவதற்காக தமிழக அரசின் லைசென்ஸ் தேவைப்படுகிறது.
இந்த உரிமங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம், மோட்டார் வாகன அலுவலகம் ஆகியவற்றில் கிடைக்கும். மாவட்ட தலைநகர்களிலும் முக்கிய ஊர்களிலும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படும். அது போல் மோட்டார் வாகன அலுவலகங்களும் நகரங்களிலும் முக்கிய தாலுக்காக்களிலும் இருக்கும்.
இங்கு பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, வாகனத்தை புதுப்பித்தல் சான்று, வாகன பெயர் மாற்றம், இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம், கனரக வாகனம் உள்ளிட்டவைகளை ஏற்கெனவே பெற்ற லைசென்ஸில் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், லைசென்ஸை புதுப்பித்தல், வாகன விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிதல் உள்ளிட்ட பணிகள் நடக்கும்.
புதிதாக உரிமம் எடுப்பதற்கு முதலில் பழகுநர் உரிமம் எடுக்கப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து அலுவலகத்தில் ஒதுக்கும் நாளில் அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து வாகனத்தை ஓட்டி காண்பித்துவிட்டு அதில் தேர்ச்சி பெற்றால் லைசென்ஸிற்கு போட்டோ எடுக்க செல்லலாம். சில மணி நேரங்களில் லைசென்ஸ் ரெடியாகிவிடும்.
ஆனால் பலரை வேலை நாட்களில் லைசென்ஸ் வழங்க வர சொல்வதால் பணிக்குச் செல்வோர், அரசு ஊழியர்களால் குறிப்பிட்ட நாளில் போய் உரிமம் எடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால்தான் இனி சென்னையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்கும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பணிக்கு செல்வோர் ஓட்டுநர் உரிமம் பெற வசதியாக சனிக்கிழமைகளில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படும் என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பலர் வரவேற்றுள்ளனர். வார நாட்களில் லைசென்ஸ் எடுக்க அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க வேண்டியுள்ளது. இனி சனிக்கிழமையும் இயங்குவதால் விடுப்பு எடுக்க தேவையில்லை, வார இறுதி பலருக்கு விடுமுறைதானே என்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications