அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிக்கல்.. தனி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யணுமா? அப்படின்னா யுடிஎஸ்?
சென்னை: பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த நடைமுறையில் சில சிக்கல்களும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும், இதுநாள்வரையிலும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், யுடிஎஸ் பத்திரம், கட்டுமான ஒப்பந்தம் தனித்தனியாக பதிவு செய்யப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
பணிநிறைவு சான்றிதழ்: அதனால்தான், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற திட்டங்களில், யுடிஎஸ் பத்திரத்திலேயே கட்டிட மதிப்பையும் குறிப்பிட்டு, இரண்டுக்கும் சேர்த்து முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க, பதிவுத்துறை முடிவு செய்திருக்கிறது. அந்தவகையில், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற குடியிருப்புகளில், வீடு விற்பனையின்போது, யுடிஎஸ் பத்திரத்தில் வீட்டின் பரப்பளவையும், மதிப்பையும் குறிப்பிடுவது சமீபத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த முடிவானது, இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது..
முன்பதிவு: இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படுவதுடன், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும், பதிவுக்கான கூடுதல் செலவால், வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், பல இடங்களில் முன்பதிவை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்" என்றும் அரசுக்கு கோரிக்கைகளும் தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், பதிவுத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், "அடுக்குமாடி திட்டங்களில் பணி நிறைவு சான்றிதழ் பெற்ற வீடுகளுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும். பணிகள் நடந்து வரும் திட்டங்களில், யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்வதில், எந்தவிதமானதடையும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண பத்திரம்: ஆனால், இதில், திடீர் புகார் ஒன்று கிளம்பி உள்ளதாம். பணிகள் முடியாத திட்டங்களில், யுடிஎஸ் பத்திரங்களை தனியாக பதிவு செய்ய, சார் - பதிவாளர்கள் மறுப்பதாகவும், கட்டிட மதிப்பையும் சேர்த்து, அதற்கும் முத்திரை தீர்வை செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும், கட்டுமான பணிகள் முடியவில்லை என்பதற்கு, தனியாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி சொல்கிறார்களாம். எனினும், இந்த சிக்கலும் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications