கத்திபாரா விபத்து: என் மாப்பிள்ளை மேல் எந்த தப்பும் இல்லை.. அரசின் அலட்சியம்தான்.. உறவினர் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டும் பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்த இளைஞருக்கு இரு கைகுழந்தைகள் உள்ள நிலையில் அவர்களுடைய எதிர்காலத்திற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கிண்டி கத்திப்பாரா அருகே தாம்பரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஆலந்தூர்- ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து அந்த பேருந்து அங்கு பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சாலை வழிகாட்டும் பலகையின் தூணின் மீது மோதியது. இதில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அந்த பலகை அப்படியே சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த சண்முக சுந்தரம் என்ற இளைஞர் சிக்கினார். பலத்த காயமடைந்த நிலையில் அவரை அங்கிருந்தோர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அது போல் ஒரு மினி சரக்கு வாகனமும் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து மேலும் 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்திற்கு பிறகு ஓட்டுநர் ரகுநாத் தலைமறைவானார்.

4 பிரிவுகள்

4 பிரிவுகள்

இதையடுத்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இறந்தவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த 28 வயது சண்முக சுந்தரம் ஆவார். இவருக்கு மனைவி, இரு சிறிய குழந்தைகள் உள்ளனர். வழிகாட்டும் பலகை விழுந்து உயிரிழந்த விபத்தில் இறந்த சண்முக சுந்தரத்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

சண்முகசுந்தரம்

சண்முகசுந்தரம்

இந்த சம்பவம் குறித்து சண்முகசுந்தரத்தின் உறவினர் கூறுகையில், என் மாப்பிள்ளைதான் இந்த விபத்தில் இறந்தார். அவருக்கு இரு கைக்குழந்தைகள் உள்ளனர். அவரது ஒற்றை வருமானத்தை வைத்துதான் அந்த குடும்பம் நடந்தது. தற்போது அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும். இந்த சம்பவம் குறித்து சண்முகசுந்தரத்தின் உறவினர் கூறுகையில், என் மாப்பிள்ளைதான் இந்த விபத்தில் இறந்தார். அவருக்கு இரு கைக்குழந்தைகள் உள்ளனர். அவரது ஒற்றை வருமானத்தை வைத்துதான் அந்த குடும்பம் நடந்தது. தற்போது அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

என் மாப்பிள்ளை ஹெல்மெட் அணிந்திருந்தார், அவரிடம் ஆர்சி புத்தகம், லைசன்ஸ், வாகன காப்பீடு எல்லாமே பக்காவாக இருந்தது. எனினும் அரசு பேருந்து சாலை வழிகாட்டும் பலகையில் இடித்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது. எனவே இது முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தின் காரணமாகவே நடந்தது. எனவே அந்த குடும்பத்திற்கு ஏதாவது நிதியுதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+