சிறுமியை கடித்துக் குதறிய நாய்.. அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிசிடிவி காட்சிகள்.. நாயின் உரிமையாளர் கைது
சென்னை: சென்னை அருகே சிறுமி ஒருவரை ஜெர்மன் ஷெப்பார்ட் நாய் ஒன்று கொடூரமாக கடித்து குதறிய சம்பவத்தின் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் நாயின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் பல்வேறு வகையான வெளிநாட்டு நாய்களை உரிமையாளர்கள் தங்கள் செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சில நேரங்களில் அவை அருகில் வசிக்கும் மக்களையோ அல்லது குழந்தைகளையோ கொடூரமாக தாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெர்மன் ஷெப்பர்ட், பிட்புல், ராட்வீலர், ஹல்கீஸ், டாபர்மேன் உள்ளிட்ட நாய் இனங்களால் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று சிறுமியை கொடூரமாக கடித்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெர்மன் ஷெப்பர்ட்
நொளம்பூர் பகுதியில் உள்ள ராம்நகரில் மிதுனம் அப்பார்ட்மெண்ட் என்ற குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இந்த குடியிருப்பில் வசித்து வரும் ஜெர்மர் ஷெப்பர்ட் வகை நாயை வளர்த்து வருகிறது. மிகவும் ஆக்ரோஷ குணம் கொண்ட நாயுடன் விஜயலட்சுமி குடியிருப்பு வளாகத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த டந்த 28ஆம் அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் விஜயலஷ்மி தனது ஜெர்மன் ஷெப்பர்டு நாய் உடன் வாக்கிங் செல்வதற்காக நாயை வீட்டில் இருந்து வெளியே கூட்டி வந்துள்ளார்.

சிறுமியை கடித்த நாய்
அப்போது அவரது வீட்டருகே சரஸ்வதி என்ற 9 வயது சிறுமி நடந்து வந்துள்ளார். அப்போது அவரைக் கண்ட விஜயலட்சுமியின் நாய், பயங்கர கோபமடைந்து குரைத்துள்ளது. தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்த நாய் ஒரு கட்டத்தில் விஜயலட்சுமி உடனிருந்து கயிற்றுடன் ஓடி சிறுமியை துரத்தியது. சிறுமியும் பயத்துடன் ஓடிச்சென்று நிலையில் ஒரு இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார் அப்போது அந்த நாய் சிறுமையை பயங்கரமாக கடித்துக் குதறியது 16 இடங்களில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்த சிறுமியை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாயின் உரிமையாளர் கைது
இதையடுத்து சிறுமிக்கு தையல் உள்ளிட்டவை போடப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நலமுடன் வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி சரஸ்வதியின் பெற்றோர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயின் உரிமையாளரான விஜயலட்சுமியை கைது செய்தனர். இனி இதுபோன்ற தவறு நடக்காது என விஜயலட்சுமி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்ததை அடுத்து அவரை ஜாமீனில் போலீசார் விடுதலை செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் சிறுமியை நாய் கொடூரமாக தாக்கும் வீடியோவும் அக்கம்பக்கத்தினர் நாயை கட்டையைக் கொண்டு விரட்டியடித்து சிறுமியை மீட்டு பாதுகாப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் நாய்களை வளர்ப்போர் அதனை கவனத்துடன் கையாள வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்












Click it and Unblock the Notifications