தேர்தல் பத்திரங்களை வெளியிட நாளை வரை டைம்.. ஆனால்.. ஒரே ஒரு சலுகை.. பாஜகவிற்கு ஹாப்பிதான் போலயே!
சென்னை: தேர்தல் பத்திர விவரங்களை நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
மார்ச் 12 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை வரைதான் டைம்.. அதற்குள் பத்திரங்களை வெளியிடுங்கள் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூன் வரை கால அவகாசம் கேட்ட எஸ்பிஐயின் மனு நிராகரிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாங்கிய மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை எஸ்பிஐ வெளியிட வேண்டும். மார்ச் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் பொது விவரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சலுகை; தேர்தல் பத்திர விவரங்களை நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அதன்படி தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி நிதி கொடுத்த நிறுவனங்கள் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் கொடுத்த பணத்தை வெளியிட வேண்டும். அதேபோல் எந்த கட்சி எல்லாம் பணம் பெற்றனர் என்றும் வெளியிட வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று சலுகை கொடுத்துள்ளது.
எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட கூடுதல் அவகாசம் எடுக்கும் என்பதால் எஸ்பிஐ கூடுதல் நேரம் கேட்டது. இதனால் நாளையே கொடுங்கள்.. ஆனால் இந்த விவரம் வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பது வெளியாகாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பாஜக ஹாப்பி: 2022-23 நிதியாண்டில், பாஜக கிட்டத்தட்ட ₹ 1,300 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது, அதே காலகட்டத்தில் காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இது ஏழு மடங்கு அதிக நிதி ஆகும்.
இந்த ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,120 கோடியாகும், தேர்தல் பத்திரங்களில் மொத்தத்தில் 61 சதவீதம் பாஜகவிற்கு சென்றுள்ளது. முந்தைய 2021-22 நிதியாண்டில், பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 1,775 கோடி. 2022-23 ஆம் ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,360.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் வருவாயில் சரிவைச் சந்தித்து உள்ளது காங்கிரஸ். 2022-23ல் ₹ 171 கோடியை மட்டுமே காங்கிரஸ் ஈட்டியது. இது 2021-22 நிதியாண்டில் பெற்ற ₹ 236 கோடியிலிருந்து குறைந்துள்ளது.
பாஜகவிற்கு தொடர்ந்து சாதகமாக இருந்த இந்த திட்டத்தை தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
வழக்கு வாதம்: முன்னதாக தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு மார்ச் 6ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இதை ஜூன் 30, 2024 வரை நீட்டிக்க எஸ்பிஐ கோரிக்கை வைத்தது.
அவகாசம் கோரிக்கை; தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்க கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதில் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பினர். அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்க கூடியது, அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர். நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. எல்லாம் ஒரே இடத்தில் தானே இருக்கிறது. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தரவை தான் எஸ்பிஐ வங்கிக்கு கொடுத்தோம் அதனை பின்பற்றுவதற்கு கால அவகாசம் கோருவது ஏன்? தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
அதை எளிதாக எடுக்க முடியுமே. அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது.. எங்களுக்கு புரியவில்லை.. உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை
எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். சரியாக அவகாசம் முடியும் 2 நாட்களுக்கு முன் வீம்பிற்கு புதிய மனு தாக்கல் செய்தது ஏன் ?, என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உத்தரவு: மார்ச் 12 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை வரைதான் டைம்.. அதற்குள் பத்திரங்களை வெளியிடுங்கள் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications