சுழண்டு சுழண்டு வரும் "சக்கரம்".. வங்க கடலில் ரெமெல் புயலால் வீசுது அலை! எகிறியடிக்குது "பாறை மீன்"
சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகியிருக்கும் சூழலில், ஒட்டுமொத்த மீன் பிரியர்களும் கவலையில் உள்ளார்கள்.. என்ன காரணம் தெரியுமா?
மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் இருந்து வருவதால், மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. மீனவர்களும் குறைந்த ஆழத்திலேயே மீன்களை பிடித்து விற்பனை செய்வதால், விற்பனைக்கு வரும் மீன்களின் விலையும் ஒரேயடியாக அதிகரித்துவிடுகிறது.

சென்னை காசிமேடு, கோவை உக்கடம், உள்ளிட்ட பல்வேறு மீன் மார்க்கெட்டுகளில் மீன விலை உயர்ந்தபடியே உள்ளது.. வழக்கமாக ரூ.700க்கு விற்பனையாகும் வஞ்சிரம் மீன் ரூ.1200க்கு விற்கப்படுகிறது. மற்ற மீன்களும் கிலோவுக்கு ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தபிறகுதான் விலை குறைந்து பழைய நிலைக்கு விற்பனை செய்யப்படும் என்கிறார்கள் மீன் வியாபாரிகள். தற்போது கோடை மழை பெய்து வருவதால், மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டதும், மீன்விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், வங்கக் கடலில் ரெமல் புயல் உருவாகியிருக்கிறது..
வார்னிங்: கடலில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்களுக்கும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருநதது.. இதனால், மீனவர்களும் கரைக்கு திரும்பி உள்ளார்கள்.. புயல் காரணமாக வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.
இந்த கொந்தளிப்பு அடுத்தடுத்த நாட்களிலும் காணப்படும் என்பதாலும், கடலில் சூறைக்காற்று வீசும் என்பதாலும், மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் வானிலை ஆய்வு மையமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொண்டனர். எனவே தமிழ்நாட்டில் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சி: எப்போதுமே சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மட்டும்தான் மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.. அந்தவகையில், தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் துறைமுகத்தில் உள்ள மீன் அங்காடியில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.. ஆனால் மீன்களின் விலையை கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள் மீன் பிரியர்கள்..
வெறும் 400 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ ஷீலா மீன், இப்போது 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கூடை சாளை மீன் நேற்று 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.. ஆனால், இன்று 6 ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டதாம்.. பாறை மீன் 700 ரூபாய் வரையிலும், குருவளை 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை குறையும்: மீன்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் மீன் வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கக் கடலில் புயல் கரையை கடந்த பிறகு, நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க சென்றால் மட்டுமே இந்த விலை உயர்வு குறையும் என்கிறார்கள் மீன் வியாபாரிகள். இதனால் மீன் பிரியர்கள் நொந்துபோயுள்ளனர்...!!
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications