சென்னைக்கு அலைய தேவையில்லை.. மதுரை, கோவை, சேலம், நெல்லையிலும் ரெம்டெசிவிர் கிடைக்கும்.. அரசு அசத்தல்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மேலும் 5 நகரங்களில் அந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்து அசத்தியுள்ளது தமிழக அரசு.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்தான் இதுவரை ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது. மருத்துவரின் பரிந்துரை, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களோடு செல்வோருக்கு மருந்து தரப்பட்டது. ஆனால் இதற்காக நாள் கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் காத்து கிடந்தனர்.
இந்த நிலையில், மதுரையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கழகம் சார்பில் , மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நுழைவாயில் அருகே பிரத்தியேக மையம் அமைக்கப்பட்டு ரெம்டெசிவிர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவிர் மருந்து விலை
ஒரு குப்பி, ரெம்டெசிவிர் மருந்து, 1568 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் நாள் என்பதால், பலருக்கும் விவரம் தெரியவில்லை. எனவே, ரெம்டெசிவிர் மருந்து குறைந்த அளவே விற்பனையானது.

கோவை விற்பனை
இதேபோல, கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனைக்காக தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மருந்து வாங்குவதற்கு வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதல் தடுப்பு அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் படுக்கைகள்
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன், ஊரடங்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதுதவிர மேலும் 12500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 7 நாட்களுக்குள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

5 மாவட்டங்கள்
ரெம்டெசிவிர் மருந்தை, தமிழகத்தில், மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி போன்ற 5 மாவட்டங்களுக்கு வழங்குவதாகவும், சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை போலவே அங்கேயும் அதற்கான வழிமுறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள், மருந்துகள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications