வாடகைக்கு போறீங்களா? இது தெரிஞ்சுக்கணும்! லீஸ் வீட்டுக்கு போகும்போது கவனிக்க வேண்டியது! குட் டிப்ஸ்
சென்னை: சென்னையில் லீசுக்கு விட்டிருந்த வீட்டை வங்கியில் அடமானம் வைத்து, ரூ.23 லட்சத்தை கடன் பெற்று, அந்த பணத்தை திரும்ப செலுத்தாமல், மோசடி செய்யப்பட்டுள்ளது.. இறுதியில் அந்த வீட்டை ஜப்தி செய்ய வங்கி முடிவு செய்யவிருந்த நிலையில், இந்த விஷயம் வெளிஉலகுக்கு தெரியவந்தது.. இதையடுத்துதான், வாடகை வீட்டை உரிமையாளருக்கு தெரியாமல் 3வது நபருக்கு அடமானம் வைத்தால் மோசடி வழக்கு பாயும் என்று டிஜிபி எச்சரித்திருக்கிறார்.
சென்னை முகப்பேரில் கனகராஜ் என்பவரின் வீட்டை ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டை அடமானம் வைத்து ராமலிங்கம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராமலிங்கம் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், மோசடிகளை தடுக்க எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உத்தரவிட்டிருந்தது.

மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோவை ஹைகோர்ட், காவல்துறை தாக்கல் செய்தது. விழிப்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த டிஜிபி, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருக்கு ஐகோர்ட் 4 நாட்களுக்கு முன்பு பாராட்டு தெரிவித்திருந்தது.
வீடு வாடகைக்கு
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.. அதில், "வீடு வாடகைக்கு இருப்பவர்கள், அந்த வீட்டை உள்வாடகைக்கு விடுகிறார்கள்.. இது சட்டப்படி தவறாகும்..
அதேபோல குடியிருக்க சென்றால், அந்த வீட்டை குடியிருக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை குடோனாக பயன்படுத்துவதோ? அல்லது சட்டவிரோத பொருட்களை கொண்டுவந்து வைத்துக் கொள்வதோ தவறாகும். குட்கா, வெடிகுண்டு இதெல்லாம் குடியிருக்கும் வீட்டில் வைக்ககூடாது.
எத்தனை பேர் குடியிருக்க போகிறார்கள்? குடும்பமா? பேச்சிலரா? வாடகை தேதி என்ன? என்பதெல்லாம் முன்கூட்டியே ஹவுஸ் ஓனரிடம் பேசி கொள்ள வேண்டும். அதேபோல, வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வாடகைதாரர்கள் சொன்னாரோ, அல்லது வீட்டை காலி செய்ய சொல்லி, ஹவுஸ்ஓனர்கள் சொன்னாலோ, 3 மாத நோட்டீஸ் தரவேண்டும். சட்டப்பூர்வமாக இதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
சட்டவிரோதம்
ஹவுஸ் ஓனர்களைவிட, வாடகைதாரர்களுக்கு மட்டுமே அதிக அதிகாரம் உள்ளது.. அதனால், அவர்களை திடீரென வெளியே அனுப்ப முடியாது.. அது சட்டவிரோதம் ஆகும். எனவே, இரு தரப்பிலுமே கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல, வீடு வாடகைக்கு விடுவதில் இன்றைக்கு நிறைய ஆப்கள் வந்துவிட்டன.. நிறைய மோசடிகளும் நடக்கின்றன.. குறிப்பாக, ஹவுஸ்ஓனர்கள் வெளியூர்களில் இருக்கும்பட்சத்தில், போலி ஆவணத்தை தயாரித்து, வீட்டையே விற்க முயற்சிப்பார்கள்.. வீட்டுக்கான பவர் தங்களிடம்தான் உள்ளது என்பதுபோல, ஆவணத்தை இவர்களே போலியாக தயாரித்து கொள்வார்கள்..
பவர் பத்திரம்
புரோக்கருக்கு கமிஷன் தரவேண்டுமே என்று ஆன்லைனிலேயே பலரும் வீடு தேடுகிறார்கள். இதற்கென உள்ள ஆப்பில் லாகின் செய்து உள்ளே சென்று பார்த்தால், சம்பந்தப்பட்ட ஏரியாவில் வாடகை வீடுகள் வீடியோக்களுடன் போட்டோக்களுடன் தென்படும்.. வீடு பிடித்துவிட்டால், பணம் கட்டுவது, அக்ரிமென்ட் போடுவது என அனைத்துமே ஆன்லைனிலேயே செய்து கொள்கிறார்கள்.. ஏனென்றால், பல இடங்களில் ஓனர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.
இப்படித்தான், ஒரு கும்பல், வீட்டை வாடகைக்கு எடுத்து, உள்ளே நுழைந்து, வீட்டு ஓனர் பெயரில் 50 லட்சத்துக்கு லீஸுக்கு எடுத்து கொண்டது.. வெளிநாட்டிலுள்ள ஓனருக்கு ஒரு மாசம், 2 மாசம் வாடகை வராதபோதுதான் சந்தேகம் எழுந்துள்ளது. பிறகு தங்களுக்கு தெரிந்தவர்களை வீட்டுக்கு அனுப்பி பார்த்தபோது அங்கு வேறு நபர்கள் குடியிருந்தது தெரியவந்துள்ளது.. இதுகுறித்து கேட்டதற்கு லீசுக்கான அக்ரிமெண்டை எடுத்து காட்டியிருக்கிறார்கள்.
டிஜிபி எச்சரிக்கை
ஆனால், வாடகை ஒப்பந்த சட்டத்தின்படி, இதுபோன்ற மோசடிகளுக்கு நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்... கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட சங்கர்ஜிவால் டிஜிபி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், வாடகை வீட்டை உரிமையாளருக்கு தெரியாமல் 3வது நபருக்கு அடமானம் வைத்தால் மோசடி வழக்கு பாயும் என்று எச்சரித்திருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications