இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்.. ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது என்றும், இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்றும் சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் (Justice Anand Venkatesh) கூறியுள்ளார். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பம் எல்லாம் தரையோடு தரையாக போய்விடும். இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் குறைகிறது என்ற வாதத்தை நான் எந்த காலத்திலும் ஏற்க மாட்டேன். அந்த மாதிரி ஒன்று கிடையவே கிடையாது என்றும் அவர் கூறினார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோடம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. நிறையே பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நான் 95 எடுத்தேன், நீங்க 70 மார்க் எடுத்தீங்க.. 95 என்னை ஒதுக்கிவிட்டு 70 எடுத்த உங்களுக்கு சீட் கிடைத்துவிட்டது என நினைக்கிறார்கள். இது அவர்களுக்கான கோபம்.
ஆனால், 75 எடுத்தவர் ஒரு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார். 95 எடுத்தவர் இரண்டு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார். நான் இரண்டு காலில் ஓடி முதலிடம் வந்தேன். ஆனால் 50 மீட்டரில் உங்களுக்கு வெற்றி என்று சொல்லிவிட்டார்கள் என சொல்லக்கூடாது. ஏனெனில் அப்படித்தான் சொல்வார்கள். அவர்களையும் எப்போது இரண்டு காலில் ஓட வைக்கிறமோ அதுவரைக்கும் ரிசர்வேஷன் என்பதை இந்த நாட்டில் இருந்து நாம் எடுக்க முடியாது.
இரண்டாவது இடஒதுக்கீடு கொடுத்ததால் தரம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் இதை நான் ஏற்கவில்லை. இட ஒதுக்கீடு கொடுத்ததால்தான், பிசி, எம்.பி.சி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவுகளில் இருந்த புத்திசாலித்தனமானவர்கள் வந்துவிட்டார்கள். அதனால் இதை பொத்தாம் பொதுவாக பேசமுடியாது. இதை தரவுகள் வைத்துதான் பேச முடியும்.
அப்போது நாம பார்த்துகிட்டோ இருக்கிறோம். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பம் எல்லாம் தரையோடு தரையாக போய்விடும். இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் குறைகிறது என்ற வாதத்தை நான் எந்த காலத்திலும் ஏற்க மாட்டேன். அந்த மாதிரி ஒன்று கிடையவே கிடையாது.
நாடு முன்னேற எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். யாரோ ஒரு பத்து பேர் வாய்ப்பை வைத்துக்கொண்டு நாடு முன்னேற முடியாது. எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். அந்த வாய்ப்பை கொடுப்பதற்கு இட ஒதுக்கீடு என்பது ரொம்ப முக்கியம். இதுதான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications