சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது புகார் தெரிவிக்கலாம்.. ரிசர்வ் வங்கி

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது புகார் தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிடபட்ட 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அளித்துள்ளார்.

 Reserve Bank says action will be taken that those banks refuses to get Rs 10 coin

அந்த மனுவில் பத்து ரூபாய் நாணயங்கள் பல இடங்களில் வாங்க மறுக்கிறார்கள் என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பத்து ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆனால் எந்த வணிக நிறுவனங்களும் கண்டுகொள்ளாமல் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

இந்து மகா சபை கூட்டம் குறித்து கோவை போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவுஇந்து மகா சபை கூட்டம் குறித்து கோவை போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு

மேலும் புதிதாக 10 ரூபாய் நாணயங்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

 Reserve Bank says action will be taken that those banks refuses to get Rs 10 coin

இதற்கு ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கமலக்கண்ணன் விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது புகார் தெரிவிக்கலாம். புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் குறைதீர் மையத்தில் புகார் கொடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

English summary
Reserve Bank says action will be taken that those banks refuses to get Rs 10 coin as it is valid one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X