இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது ஏன் மிகவும் சவாலானது.. யாரெல்லாம் வாங்க முடியாது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போன்ற பெரிய நகரங்களில் புறம்போக்குகளில் குடியிருப்போர், பல வருடம் வசித்தாலும் இன்று வரை பட்டா வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதேபோல் தமிழ்நாட்டின் நகரம் , பேரூராட்சிகளில் குறிப்படட நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு ஒரு போதும் இலவச வீட்டு மனை கிடைக்காத நிலை இருக்கிறது. என்ன மாதிரியான நிலம், அதற்கு தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இலவச வீடுமனை பட்டா என்பது ஆட்சேபணையற்ற நத்தம் புறம்போக்கு வகைகளில் குடியிருப்போருக்கு மட்டுமே அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு நிலங்களான, நீர் நிலைகள், வாய்க்கால்கள், வண்டிப்பாதை, அணாதீனம், தீர்வை ஏற்பட்ட புஞ்சை தரிசு, தீர்வை ஏற்பட்ட நஞ்சை தரிசு, காலேஜ் புறம்போக்கு, உரக்குழி, குன்று மலை, கல்லாங்குத்து, கரடு பாறை, மேடு பள்ளம், நந்தவனம், உவர் பூமி, விளையாட்டு மைதானம், குவாரி, தடம், தரிசு, திடல், வெட்டுக்குழி, தீர்வை ஏற்படாத புஞ்சை தரிசு, ஜல்லிக்குழி, மேய்க்கால் போன்ற நிலைங்களில் இலவச வீடு மனை பட்டா அரசால் வழங்கப்படுவது இல்லை.. இந்த நிலங்கள் எல்லாம் ஆட்சேபனைக்குரிய இடங்கள் ஆகும். இந்த நிலங்களில் வசிப்போருக்கு அரசு பட்டா வழங்குவதே இல்லை.

patta land real estate

அதேநேரம் அணாதீனம், தீர்வை ஏற்பட்ட புஞ்சை தரிசு, தீர்வை ஏற்பட்ட நஞ்சை தரிசு, காலேஜ் புறம்போக்கு, உரக்குழி, குன்று மலை, கல்லாங்குத்து, கரடு பாறை, மேடு பள்ளம், நந்தவனம், உவர் பூமி, விளையாட்டு மைதானம், குவாரி, தடம், தரிசு, திடல், வெட்டுக்குழி, தீர்வை ஏற்படாத புஞ்சை தரிசு, ஜல்லிக்குழி, மேய்க்கால் போன்ற நிலங்களில் ஏராளமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு இலவச வீட்டு மனை தர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதில் குறிப்பாக மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மட்டும் பல ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பது இல்லை. இந்நிலையில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் என்பது, கிராமங்களில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆகும். இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பராமரித்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் விடப்பட்ட இடங்கள் ஆகும். இந்த இடங்களை எல்லாம் மக்கள் தனிப்பட்ட முறையில் உபயோகித்து கொள்ள தொடங்கினார்கள். சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேய்க்கால் நிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் பட்டா வாங்யிகிருந்தாலும் அதனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக மேய்க்கால் இடங்களில் வசிப்போர் கவலையில் உள்ளனர்.

இது பற்றி அரசு ஒருமுறை கூறும், "மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்து ஆய்வு நடந்ததாக கூறியது. அண்மையில் கூட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே மிக அதிகமான ஆட்சேபனை அற்ற நிலங்களில் குடியிருப்போருக்கே வழங்கப்பட்டது.

அதாவது தெளிவாக சொல்வது என்றால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 411, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அம்பத்தூர் திட்டப் பகுதியில் 516, நகர நிலவரித் திட்டத்தின் கீழ் மாதவரம் மற்றும் அம்பத்தூர் வட்டங்களில் 5,070, ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின்கீழ் வரன்முறை செய்யப்பட்டதில் சோழிங்கநல்லூர் வட்டத்தில் 484, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருவொற்றியூர், மதுரவாயல் மற்றும் மாதவரம் வட்டங்களில் நத்தம் நில ஆவணங்களில் ரயத்துவாரி மனை என மாற்றம் செய்யப்பட்ட 19,114 பட்டாக்கள், நகர நில அளவை ஆவணங்களில் தனியார் நிலங்கள் சர்கார் நஞ்சை, புஞ்சை என பதிவாகியுள்ளதை சரி செய்து ரயத்துவாரி நஞ்சை, புஞ்சை என வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்ட 3,253 பட்டாக்கள், என மொத்தம் 28,848 பட்டாக்கள் சென்னையில் வழங்கப்படடுள்ளது. ஆனால் ஆட்சேபனைக்குரிய நிலங்களில் வசிப்போருக்கு அரசு பட்டா வழங்கவில்லை.

இந்த சூழலில் நகராட்சி, பேரூராட்சி பெல்ட் ஏரியாவில் உள்ள கட்டுப்பாட்டை தளர்த்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் திருப்போரூர் தொகுதி விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதுபற்றி அண்மையில் கடிதம் கூட எழுதி இருந்தார். பல ஆண்டுகாலமாக மேய்க்கால் பகுதியில் குடியிருந்து வரும் எளிய மக்கள், மின் இணைப்பு இல்லாமல் மிக, மிக கடினமான வாழ்க்கை சூழலில் உள்ளனர். அவர்களின் நிலைமையை மாற்றி மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சேபனைக்குரிய நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா எப்போதுமே கிடைக்காது. அதேநேரம் மேய்க்கால், அணாதீனம், தீர்வை ஏற்பட்ட புஞ்சை தரிசு, தீர்வை ஏற்பட்ட நஞ்சை தரிசு, காலேஜ் புறம்போக்கு, உரக்குழி, குன்று மலை, கல்லாங்குத்து, கரடு பாறை, மேடு பள்ளம், நந்தவனம் போன்ற நிலங்களை அரசு ஆட்சேபனையற்ற நிலங்களாக மாற்றினால் மட்டுமே இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கும். அதுவரையில் பட்டா கிடைப்பது சாத்தியமே இல்லை என்பதே எதார்த்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+