எல்ஐசியின் இந்த 6 திட்டங்கள் தெரிந்தால் நிம்மதியா ரிடையர் ஆகலாம்.. மாதம் ரூ 20000 பென்ஷன் சீக்ரெட்
சென்னை: முதுமைக் காலத்தை நிம்மதியாகவும், பொருளாதார சுதந்திரத்துடனும் கழிக்க விரும்புவோருக்கு எல்ஐசியின் பென்ஷன் திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாகும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்கள் சேமிப்பை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து நிலையான வருமானம் பெற இத்திட்டங்கள் உதவுகின்றன. சந்தை அபாயங்கள் இல்லாத உத்தரவாதமான வருவாயை எதிர்பார்ப்பவர்களுக்கு எல்ஐசி வழங்கும் இந்தத் திட்டங்கள் வரப்பிரசாதமாகும். நடைமுறையில் உள்ள சில பென்ஷன் திட்டங்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
அரசுப் பணியில் இருப்பவர்களுக்குக் கிடைப்பது போல, தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் முதுமைக் காலத்தில் ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் எல்ஐசி நிறுவனம் பல்வேறு பென்ஷன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், வரிஷ்தா ஓய்வூதிய பீமா யோஜனா உட்பட, எல்ஐசியின் மற்ற முக்கியமான திட்டங்களும் ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன. அவை அனைத்தையும் இங்கே எளிமையாகப் பார்க்கலாம்.
வரிஷ்தா ஓய்வூதிய பீமா யோஜனா
முதியோர்களுக்காக இந்திய அரசு எல்ஐசி மூலம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்பு திட்டம் தான் வரிஷ்தா ஓய்வூதிய பீமா யோஜனா (VPBY).. முதியோர்களுக்காக இந்திய அரசு எல்ஐசி மூலம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமிது.
60 வயது நிரம்பியவர்கள் இதில் முதலீடு செய்யலாம். 10 ஆண்டுகளுக்கு 8 சதவீத வட்டி விகிதம் உறுதியாக இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஒருமுறை முதலீடு செய்தால் மாதந்தோறும் அல்லது வருஷந்தோறும் பென்ஷன் பெறலாம். அவசரத் தேவைக்கு 75 சதவீதம் வரை கடன் பெற முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
எல்ஐசி ஜீவன் அக்ஷய் - VII
இந்த திட்டத்தை Immediate Annuity அதாவது உடனடி வருடாந்திரத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உங்களிடம் ஒரு பெரிய தொகை கையிருப்பு இருந்தால், அதை இதில் முதலீடு செய்துவிட்டு அடுத்த மாதமே பென்ஷன் வாங்கத் தொடங்கலாம். 30 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் இதில் இணையலாம். உங்கள் ஆயுள் முழுமைக்கும் அல்லது உங்களுக்குப் பிறகு உங்கள் துணைவியார் பென்ஷன் பெறுவது என இதில் பல தேர்வுகள் உள்ளன.
எல்ஐசி ஜீவன் சாந்தி
இந்த திட்டம் எதிர்காலத்திற்காக பிளான் செய்பவர்களுக்கு சிறந்தது. இப்போது ஒரு தொகையை முதலீடு செய்துவிட்டு, 1 முதல் 12 ஆண்டுகள் வரை கழித்து பென்ஷன் வாங்க தொடங்கலாம். காத்திருக்கும் காலம் அதிகமாக இருந்தால், கிடைக்கும் பென்ஷன் தொகையும் கூடுதலாக இருக்கும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY)
60 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்புத் திட்டம் இதுவாகும்..10 ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் இதில் உறுதி செய்யப்படுகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் விதிகள் மற்றும் கால வரம்புகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன.
எல்ஐசி சரள் பென்ஷன்
எந்தவிதமான சிக்கலான விதிமுறைகளும் இல்லாத எளிமையான பென்ஷன் திட்டத்தை விரும்புபவர்கள்
எல்ஐசி சரள் பென்ஷன் திட்டத்தை தாராளமாக செலக்ட் செய்யலாம். இதிலும் ஒற்றை முறை முதலீடு செய்து உடனடியாகப் பென்ஷன் பெறலாம். இதில் முதலீடு செய்யும் தொகை பாலிசிதாரருக்குப் பிறகு அவரது வாரிசுதாரர்களுக்கு முழுமையாகத் திரும்பக் கிடைக்கும்.
எல்ஐசி ஜீவன் நிதி
லாபத்துடன் கூடிய திட்டம் என்றால் அது, இந்த எல்ஐசி ஜீவன் நிதி என்றே சொல்லலாம்.. இதில் நீண்ட காலத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து, முதிர்ச்சி காலத்திற்குப் பிறகு ஒரு பெரிய நிதியை உருவாக்கலாம். அதில் ஒரு பகுதியைத் தாராளமாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை வாழ்நாள் பென்ஷனாக மாற்றிக்கொள்ளலாம்.
மேற்கண்ட அனைத்துமே எல்ஐசி வழங்கும் நம்பகமான ஓய்வூதியத் திட்டங்கள்தான். உங்களின் தற்போதைய வயது, முதலீடு செய்யக்கூடிய தொகை மற்றும் எப்போது பென்ஷன் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து இவற்றில் சரியான திட்டத்தைத் தேர்வு செய்வது உங்கள் ஓய்வுக்காலத்தை நிம்மதியாக்கும்...!!












Click it and Unblock the Notifications