சென்னையில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மகன் அதிரடியாக கைது.. அதிர வைத்த கும்பல்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. எதிரே உள்ள கல்லூரி சாலை சந்திப்பில் 'மெத்தபெட்டமைன்' போதைப் பொருளுடன் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலர் கைதாகி உள்ளனர். பெங்களூருவில் தங்கி இருந்த 2 பேரை, சென்னை நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் அதிரடி கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்தும் 10.5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான நிகிலின் தந்தை கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை பொருள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருக்கிறார். அதன் பேரில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாரகள். மேலும், போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. எதிரே உள்ள கல்லூரி சாலை சந்திப்பில் 'மெத்தபெட்டமைன்' போதைப் பொருளுடன் ஸ்ரீஜித், ஹரிகிருஷ்ணன், மற்றொரு ஹரிகிருஷ்ணன், பெருமாள் ஆகிய 4 பேர் கடந்த மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10.5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்தார்கள்.
இந்த போதை பொருள் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அதன்பேரில் நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் நடத்திய புலன் விசாரணையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மனகாடு பகுதியை சேர்ந்த சுனீஷ் (32), நிகில் (32) ஆகிய 2 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பெங்களூருவில் தங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் அதிரடி கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்தும் 10.5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான நிகிலின் தந்தை கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக சென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 2 பேரை, டெல்லியில் அண்ணா சாலை தனிப்படை போலீசார் கடந்த மே 05 அன்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த அபு (39) மற்றும் டெல்லியைச் சேர்ந்த ராகுல் (19) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 15 கிராம் கொக்கைன் (Cocaine ) மற்றும் 5 கிராம் மெத்தபெட்டமைன் (Methamphetamine), 7 கிராம் ஹெராயின் (Heroin ) ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியிலும் சிலர் மெத்தபெட்டமைன் பொருளுடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கைதாகினார்கள்.












Click it and Unblock the Notifications