சென்னை.. மிரட்டிய “புல்லட் போலீஸ்”.. போட்டோவுடன் போட்டுகொடுத்த நெட்டிசன் - நூதன தண்டனை
ஹெல்மெட் போடாத ஒருவர் புல்லட் பைக்கில் அமர்ந்தபடி ஒரு காலை பிளாட்ஃபார்மில் வைத்து தாங்கியபடி நிற்கிறார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் அருகே ஹெல்மெட் அணியாததுடன் விதிகளுக்கு மீறிய நம்பர் பிளேட்டை கொண்ட பைக்கை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னை மிரட்டியதாக நெட்டிசன் ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு புகாரளித்த நிலையில் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
போக்குவரத்து விதிகளை மீறி சாலைகளில் ஆபத்தாக ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளை படம் பிடித்து ட்விட்டரில் போலீசாருக்கு டேக் செய்து தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி சாலைகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பலரும் சாமானியர்களின் மொபைல் கேமராக்களில் சிக்கி தண்டனை பெற்றுவிடுகிறார்கள்.

ட்விட்டரில் புகார்
இந்த நிலையில் ட்விட்டரில் அமேஜம் என்ற பயனர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், ஹெல்மெட் போடாத ஒருவர் புல்லட் பைக்கில் அமர்ந்தபடி ஒரு காலை பிளாட்ஃபார்மில் வைத்து தாங்கியபடி நிற்கிறார். அவரது பைக்கின் நம்பர் பிளேட்டில் POLICE என்றும் Praise the Lord என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

திட்டியதாக குற்றச்சாட்டு
அத்துடன் "ஹெல்மெட் போடவில்லை. நம்பர் பிளேட்டில் போலீஸ் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மார்ச் 13 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளியே காலை 10 மணியளவில் ஹெல்மெட் குறித்து கேட்டபோது தவறான வார்த்தைகளை கொண்டு திட்டினார்." என்று குறிப்பிட்டு சென்னை போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து இருந்தார்.

ஓவர் டேக் செய்ததால் பிரச்சனை
இதற்கு கமெண்ட் செய்த ஒரு நபர், நீங்கள் ஏன் ரோட்டில் செல்லும்போது டிராபிக் போலீஸ் ஆகுறீங்க? என்று கேட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்த அந்த நபர், ஓவர்டேக் செய்ததற்கு எதற்கு சார் ஓரம் கட்ட வேண்டும்? என்று பதிலளித்தார். இதற்கு அந்த நபரோ, ஓவர்டேக் பண்ணுனதுக்கு எல்லாம் ஓரம் கட்டுறாங்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அபராதம் விதிப்பு
இதற்கு உடனடியாக குறித்துக்கொண்டோம் என்று பதிலளித்த போக்குவரத்து காவல்துறை, "ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் மக்கள் ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்டுமாறு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஹெல்மெட் அணியாதது மற்றும் நம்பர் பிளேட்டுக்காக ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது." என்று தெரிவித்து உள்ளது.

வீடியோவில் அட்வைஸ்
அத்துடன் போக்குவரத்து காவல்துறை வெளியிட வீடியோவில் அந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பேசி இருப்பதாவது, "நேற்று காலை நான் எனது 2 சக்கர வாகனத்தில் அண்ணா யுனிவர்சிட்டி அருகே சென்றுகொண்டு இருந்தேன். அப்போது நான் தலைகவசம் அணியாமல் சென்றதற்காக புகாரளித்து உள்ளார்கள்.

ஹெல்மெட் போடுங்க
தலைகவசம் அணியாதது, நம்பர் பிளேட் சரி இல்லாததற்கு அபராதம் செலுத்திவிட்டேன். தயவு செய்து அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்." என்று தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications