Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பரங்கிமலையில் பொக்லைனுடன் போன அதிகாரிகள்.. 200 கோடி அரசு நிலம் அதிரடியாக மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பரங்கிமலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.200 கோடி அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோடு-பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நபர்கள் சிலர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், குத்தகை காலம் முடிந்த பின்னரும் அரசு நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல் வணிக நோக்கில் அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

Revenue department officials recovers Rs 200 crore government land in Chennai Parangimalai

இதையடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்த சுற்றுச்சுவர் மற்றும் கட்டிட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ரூ.200 கோடி மதிப்புடைய 1 ஏக்கர் நிலத்தை மீட்டார்கள்.

பரங்கிமலை பட்ரோட்டில் இதுவரை குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்கப்படாத அரசு நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக அறப்போர் இயக்கம் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "பரங்கிமலை கிராமம் சர்வே எண் 442 இல் 54,000 சதுர அடியில் அமைந்துள்ள நிலம் மற்றும் பங்களா அரசு உடமையானது. இதில் யுவான் மேரி என்பவர் போலியாக 2020இல் பத்திரப்பதிவு செய்துள்ளார். 2022-ல் இந்த நிலத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்ய வரும்பொழுது அப்போதைய சார்பதிவாளர் இதில் நடந்துள்ள மோசடியை கண்டறிந்து மாவட்ட பதிவாளருக்கு கடிதம் அனுப்பி அதன் வழியாக மாவட்ட பதிவாளர் இதை ரத்து செய்துள்ளார்.

இந்த நிலமானது யுவான் மேரிக்கு அவர் சகோதரி நிலத்தை பத்திரப்பதிவு செய்வதுபோல் 1985/2020 மூலம் சார் பதிவாளர் உமா பதிவு செய்கிறார். இதன் மூல பத்திரமாக 2048/1937 குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் இந்த ஆவணம் 2022-ல் அடுத்த பத்திரப்பதிவிற்கு வரும்பொழுது சார் பதிவாளர் இந்த மூல பத்திரங்களை ரெக்கார்ட் ரூமில் சரி பார்க்கிறார். அப்பொழுது இந்த 1937 ஆவணம் பரங்கிமலை கிராமத்தை சேர்ந்த ஆவணம் என்றும் மற்றொரு பக்கம் பெரும்பாக்கத்தை சேர்ந்த 4 சென்ட் நிலம் என்றும் இரண்டு மூல பத்திரங்கள் உள்ளதை கண்டறிந்தார்.
மற்ற ரிஜிஸ்டர் மற்றும் கணினி மயமாக்கப்படும் பொழுது கணினியில் ஸ்கேன் செய்த ஆவணங்களுடன் சரி பார்க்கும் பொழுது தான் இது உண்மையிலேயே பெரும்பாக்கம் 4 சென்ட் நிலத்திற்கான ஆவணம் என்பதும் இதை ரெக்கார்ட் ரூம் சென்று மாற்ற முற்பட்டுள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது மாற்ற முற்படும் பொழுதும் சார் பதிவாளர் உமா தான் அங்கு இருந்திருக்கிறார். இதை மாற்றியவர் ஜெயக்குமார் என்னும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்று CBCID வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால் இந்த FIRல் சார் பதிவாளர் உமாவின் பெயரை சேர்க்காமல் அவருடைய சீனியர் அதிகாரிகளின் பெயர்களையும் சேர்க்காமல் தனியார்களின் பெயர்களை மட்டும் சேர்த்துள்ளது அதிர்ச்சிகரமான ஒன்று. ஜெயக்குமாரை தனியார் மாஃபியாக்களுக்கும் அரசில் இருக்கக்கூடிய சில அரசு அதிகாரிகளே இயக்கி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல ஆவணங்கள் இதுபோன்று மூல பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாவட்ட பதிவாளர் இந்த சொத்தின் ஆவணத்தை ரத்து செய்து இருந்தாலும் அரசு இந்த நிலத்தை நேற்று வரை மீட்கவில்லை. அறப்போர் புகாருக்கு பின்பு இன்று அந்த நிலம் மீட்கப்பட்டு அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அறப்போர் புகாரின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சார் பதிவாளர் உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உமா மீது உடனடியாக FIR போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இந்த மோசடிக்கு மூல காரணமாக இருக்கும் மற்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+